கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

ஆப்கானிஸ்தான் 169 ரன்களுக்கு ஆல் அவுட்: தெ.ஆப்பிரிக்கா அசத்தல் பந்துவீச்சு!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் ஆப்கானிஸ்தான் 169 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

News image

விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் தென்னாப்பிரிக்க அணியினர்.

Updated On :22 செப்டம்பர் 2024, 3:08 pm

DIN

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி ஒருநால் போட்டியில் ஆப்கானிஸ்தான் 169 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

தென்னாப்பிரிக்கா - ஆப்கானிஸ்தான் மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஷார்ஜாவில் நடைபெற்றுவருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் கேப்டன் ஷாஹிடி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

இந்த நிலையில், தொடக்க ஆட்டக்காரர்களாக ரஹ்மானுல்லா குர்பாஸ் மற்றும் அப்துல் மாலிக் இருவரும் களமிறங்கினர்.

அப்துல் மாலிக் 9 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறி ஏமாற்றமளித்தார். ஒருபுறம் அதிரடியாக அணியின் ஸ்கோரை உயர்த்திய ரஹ்மானுல்லா குர்பாஸ் தென்னாப்பிரிக்க வீரர்களின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். அவருக்கு பின்னர் வந்த யாரும் அவருக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை.

மற்ற வீரர்கள் யாரும் சரியாக சோபிக்காததால் அணியின் ஸ்கோர் மெதுவாக ஏறியது. சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட குர்பாஸ் 89 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அதில் 4 சிக்ஸர் மற்றும் 7 பவுண்டரிகளும் அடங்கும்.

கேப்டன் ஷாகிடி 10 ரன்னிலும், ரஹமத் ஷா 1 ரன்னிலும், ஒமர்சாய் 2 ரன்னிலும், இக்ரம் அலி 4 ரன்னிலும், நபி 5 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேற 9-வது விக்கெட்டாக களமிறங்கிய அல்லா கஸன்ஃபார் 3 சிக்ஸர்கள் மற்றும் 2 பவுண்டரிகளுடன் 31 ரன்கள் விளாசி வெளியேறினார். இது அணியின் ஸ்கோர் 150-ஐ கடக்க உதவியாக அமைந்தது.

34 ஓவர்கள் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 169 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

தென்னாப்பிரிக்க அணித் தரப்பில் இங்கிடி, பீட்டர், பெலுக்வாயோ ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவை 106 ரன்களுக்குள் சுருட்டி ஆப்கானிஸ்தான் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும், இரண்டாவது போட்டியில் 177 ரன்கள் வித்தியாசத்திலும் வென்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.