ரிஷப் பந்த்துக்கு ஆஸ்திரேலிய வீரர்கள் புகழாரம்!

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பந்த்துக்கு ஆஸ்திரேலிய வீரர்கள் புகழாரம் சூட்டியுள்ளனர்.
ரிஷப் பந்த் (கோப்புப் படம்)
ரிஷப் பந்த் (கோப்புப் படம்)
Published on
Updated on
2 min read

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பந்த்துக்கு ஆஸ்திரேலிய வீரர்கள் புகழாரம் சூட்டியுள்ளனர்.

கடந்த 2022 அம் ஆண்டு இறுதியில் இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பந்த் பயங்கர கார் விபத்தில் சிக்கினார். அதன் பின், ஓராண்டுக்கும் மேலாக கிரிக்கெட் விளையாட முடியாத சூழல் உருவானது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் ரிஷப் பந்த் மீண்டும் தனது கிரிக்கெட் வாழ்க்கைக்குத் திரும்பினார். அண்மையில் வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சதம் விளாசியும் அசத்தினார்.

ஆஸி. வீரர்கள் புகழாரம்

கார் விபத்துக்குப் பிறகு மீண்டும் கிரிக்கெட் பயணத்தை தொடங்கி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ரிஷப் பந்த்துக்கு ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மிட்செல் மார்ஷ் மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோர் புகழாரம் சூட்டியுள்ளனர்.

ரிஷப் பந்த் குறித்து இருவரும் பேசியதது பின்வருமாறு,

மிட்செல் மார்ஷ்

ரிஷப் பந்த மிகச் சிறந்த வீரர். அவர் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவராக இருக்க விரும்புகிறேன். கடந்த சில ஆண்டுகளாக அவர் பல கடினாமன சூழல்களைக் கடந்து வந்துள்ளார். அவர் மீண்டும் கிரிக்கெட் விளையாடத் தொடங்கியுள்ளது நம்பமுடியாத விதமாக உள்ளது. அவர் மிகவும் நேர்மறையாக இருக்கிறார். இன்னும் அவர் இளம் வீரரே. போட்டிகளை வென்று கொடுப்பதை அவர் விரும்புகிறார். அவர் மிகவும் ரிலாக்ஸாக இருக்கிறார். அவர் அழகாக எப்போதும் சிரிப்புடன் இருக்கிறார்.

டிராவிஸ் ஹெட்

இந்திய அணியில் உள்ள வீரர்களில் ஆஸ்திரேலிய வீரர்களைப் போல விளையாடுவதாக நான் நம்புவது ரிஷப் பந்த்தையே. அவர் அதிரடியாக விளையாடுவதும், கிரிக்கெட்டுக்காக உழைப்பதும் அவருடன் விளையாடுவதை மகிழ்ச்சியாக்குகிறது.

ஆஸி.க்கு சவலாக ரிஷப் பந்த்

கடந்த இரண்டு முறை ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற பார்டர் - கவாஸ்கர் தொடர்களை இந்திய அணி கைப்பற்றியதில் ரிஷப் பந்த் முக்கிய பங்கு வகித்தார். கடந்த இரண்டு முறை சுற்றுப்பயணத்தையும் சேர்த்து ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ரிஷப் பந்த் 12 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ளார். 12 இன்னிங்ஸ்களில் அவர் 624 ரன்கள் குவித்துள்ளார். அதில் ஒரு சதமும், இரண்டு அரைசதங்களும் அடங்கும். அவரது சராசரி 62.40 ஆகும். அவரது அதிகபட்ச ஸ்கோர் 159.

தற்போது வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் இந்திய அணி, வருகிற நவம்பரில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான பார்டர் - கவாஸ்கர் தொடரில் ரிஷப் பந்த் எவ்வாறு செயல்படப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வருகிற நவம்பர் 22 முதல் பெர்த்தில் தொடங்குவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com