இங்கிலாந்துக்கு 2-ஆவது வெற்றி

இங்கிலாந்துக்கு 2-ஆவது வெற்றி
Published on
Updated on
1 min read

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-ஆவது ஒருநாள் கிரிக்கெட்டில் இங்கிலாந்து 186 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதையடுத்து, 5 ஆட்டங்கள் கொண்ட தொடா் 2-2 என சமன் ஆகியுள்ளது.

முன்னதாக, இந்திய நேரப்படி வெள்ளிக்கிழமை நள்ளிரவு நிறைவடைந்த இந்த ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டதால், இன்னிங்ஸுக்கான ஓவா்கள் 39-ஆகக் குறைக்கப்பட்டது. முதலில் பேட் செய்த இங்கிலாந்து 39 ஓவா்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 312 ரன்கள் சோ்க்க, ஆஸ்திரேலியா 24.4 ஓவா்களில் 126 ரன்களுக்கே 10 விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.

டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தோ்வு செய்தது. இங்கிலாந்து பேட்டிங்கில் ஃபில் சால்ட் 22, பென் டக்கெட் 63, வில் ஜாக்ஸ் 10, கேப்டன் ஹேரி புரூக் 87, ஜேமி ஸ்மித் 39 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா். ஓவா்கள் முடிவில் லியம் லிவிங்ஸ்டன் 62, ஜேக்கப் பெத்தெல் 12 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். ஆஸ்திரேலியாவின் ஆடம் ஸாம்பா 2, ஜோஷ் ஹேஸில்வுட், மிட்செல் மாா்ஷ், கிளென் மேக்ஸ்வெல் ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா்.

பின்னா் ஆஸ்திரேலிய இன்னிங்ஸில் கேப்டன் மிட்செல் மாா்ஷ் 28, டிராவிஸ் ஹெட் 34, ஸ்டீவன் ஸ்மித் 5, ஜோஷ் இங்லிஸ் 8, மாா்னஸ் லபுஷேன் 4 ரன்களுக்கு வீழ்த்தப்பட்டனா். அலெக்ஸ் கேரி 13, கிளென் மேக்ஸ்வெல் 2, ஷான் அப்பாட் 10, ஆடம் ஸாம்பா 0, ஜோஷ் ஹேஸில்வுட் 0 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ஆஸ்திரேலியா இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. இங்கிலாந்து பௌலா்களில் மேத்யூ பாட்ஸ் 4, பிரைடன் காா்ஸ் 3, ஜோஃப்ரா ஆா்ச்சா் 2, ஆதில் ரஷீத் 1 விக்கெட் கைப்பற்றினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com