பாகிஸ்தான் அணி சரியாக செயல்படாததற்கு ஐபிஎல் தொடர் காரணமா? முன்னாள் கேப்டன் சொல்வதென்ன?

பாகிஸ்தான் அணி சரியாக செயல்படாததற்கு ஐபிஎல் தொடர் காரணமா என்பது குறித்து...
பாகிஸ்தான் அணி சரியாக செயல்படாததற்கு ஐபிஎல் தொடர் காரணமா? முன்னாள் கேப்டன் சொல்வதென்ன?
படம் | பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)
Published on
Updated on
1 min read

ஐபிஎல் தொடரில் பாகிஸ்தான் வீரர்கள் விளையாடாததே அந்த அணி சர்வதேசப் போட்டிகளில் சரியாக செயல்படாததற்கு முக்கிய காரணம் என அந்த அணியின் முன்னாள் கேப்டன் ரஷித் லாட்டிஃப் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடர் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டபோது, பாகிஸ்தான் வீரர்கள் 12 பேர் ஐபிஎல் தொடரில் இடம்பெற்று விளையாடினர். அதன் பின், அந்த ஆண்டின் பிற்பகுதியில் மும்பை தீவிரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தான் வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாட தடை விதிக்கப்பட்டது.

முன்னாள் கேப்டன் சொல்வதென்ன?

கடந்த சில ஆண்டுகளாக சர்வதேசப் போட்டிகளில் பாகிஸ்தான் அணி மிகவும் சராசரியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் நிலையில், பாகிஸ்தான் வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாடுவதை மிஸ் செய்வதாகவும், ஐபிஎல் தொடரில் பாகிஸ்தான் அணி விளையாடாததன் காரணமாகவே சர்வதேசப் போட்டிகளில் அதனால் சிறப்பாக செயல்பட முடியவில்லை எனவும் அந்த அணியின் முன்னாள் கேப்டன் ரஷித் லாட்டிஃப் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஐபிஎல் தொடரில் விளையாடுவதை நாங்கள் உண்மையில் மிஸ் செய்கிறோம். ஐபிஎல் தொடரில் பாகிஸ்தான் வீரர்கள் விளையாடியிருந்தால், கிரிக்கெட் மீதான ஆர்வம் மற்றும் பாகிஸ்தானின் வியாபாரம் என இரண்டுமே அதிகரித்திருக்கும். எங்களது வீரர்கள் ஐபிஎல் போட்டிகளில் விளையாடினால், அதனை கண்டிப்பாக எங்களது நாட்டில் யாராவது ஒளிபரப்ப முன்வருவார்கள்.

நியூசிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் தென்னாப்பிரிக்காவினை பாருங்கள். அவர்களது நாட்டிலிருந்து வீரர்கள் ஐபிஎல் தொடரில் பங்கேற்று உலகின் சிறந்த வீரர்களுக்கு எதிராக விளையாடுகிறார்கள். பாட் கம்மின்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்றும் ககிசோ ரபாடா போன்ற உலகத் தரத்திலான வீரர்களுடன் இணைந்து விளையாடும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைக்கிறது.

ஐபிஎல் தொடரின் மூலம் ஆப்கானிஸ்தான் அணி நன்கு வளர்ச்சியடைந்துள்ளது. முதலில் ரஷித் கான் ஐபிஎல் தொடரின் மூலம் வெளி உலகிற்கு அதிக அளவில் தெரியத் தொடங்கினார். தற்போது, நூர் அகமது, அஸ்மதுல்லா ஓமர்ஸாய், ஃபஸல்ஹக் ஃபரூக்கி போன்ற வீரர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்தி வளர்ச்சியடைந்து வருகின்றனர். ஐபிஎல் தொடரில் மட்டுமல்லாது, சர்வதேசப் போட்டிகளிலும் ஆப்கானிஸ்தான் வீரர்கள் சிறப்பாக விளையாடுகின்றனர் என்றார்.

அண்மையில் டி20 மற்றும் ஒருநாள் தொடர்களுக்காக நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் அணி, இரண்டு தொடர்களையும் இழந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com