தெலங்கானாவின் பெருமை... டிஎஸ்பி சிராஜை வாழ்த்திய காவல்துறை!

தெலங்கானா காவல்துறை முகமது சிராஜ் குறித்து பதிவிட்டதாவது...
Telangana Police appreciation post for Siraj.
தெலங்கானா காவல்துறையின் பதிவு.படம்: எக்ஸ் / தெலங்கானா போலீஸ்.
Published on
Updated on
1 min read

தெலங்கானா காவல்துறை இந்திய வீரர் முகமது சிராஜ் குறித்து நெகிழ்ச்சியாக வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஹைதராபாதைச் சேர்ந்த முகமது சிராஜ் (31 வயது) இந்திய டெஸ்ட் அணிக்காக 2020 முதல் விளையாடி வருகிறார்.

இதுவரை 41 டெஸ்ட்டில் 123 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். இதில் 100க்கும் அதிகமான விக்கெடுக்களை வெளிநாட்டில் எடுத்து அசத்தியுள்ளார்.

ஆண்டர்சன் - டெண்டுல்கர் டிராபியின் கடைசி டெஸ்ட்டில்  முதல் இன்னிங்ஸில் 4, இரண்டாம் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்ட நாயகன் விருது வென்றார்.

சிராஜுக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள். இதில் தெலங்கானா காவல்துறையும் கலந்துகொண்டுள்ளது. காவல்துறை ஏன் வாழ்த்தியது தெரியுமா?

கடந்த 2024ஆம் ஆண்டு டி20 சிறப்பாக பந்துவீசியதற்காக சிராஜை கௌரவிக்கும் பொறுட்டு தெலங்கானா அரசு அவருக்கு டிஎஸ்பி பதவியை அளித்தது.

இந்திய ரசிகர்கள் சிராஜை செல்லமாக டிஎஸ்பி, மியான் என்றும் அழைக்கிறார்கள்.

இந்நிலையில், தெலங்கானா காவல்துறை தனது எக்ஸ் பக்கத்தில், “ டிஎஸ்பி முகமது சிராஜுக்கு வாழ்த்துகள்! இங்கிலாந்துக்கு எதிராக வரலாற்றி வெற்றிபெற உதவிய அவரது சிறப்பான செயல்பாட்டுக்கு வாழ்த்துகள். தெலங்கானாவின் பெருமை. காவல்துறை, விளையாட்டு உடையில் அவர் ஹீரோ!” எனக் குறிப்பிட்டுள்ளது.

Summary

The Telangana Police's emotional congratulations to Indian cricketer Mohammed Siraj are going viral on the internet.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com