
மூன்று மாதங்களுக்குப் பிறகு ஆர்சிபி நிர்வாகம் தனது எக்ஸ் தளத்தில் முதல்முறையாக பதிவிட்டுள்ளது.
அந்தப் பதிவில் விரைவில் ஆர்சிபி கேர்ஸின் கூடுதல் தகவல்களை வெளியிடுவோம் என்றும் கர்நாடகத்தின் பெருமையாக தொடர்ந்து இருப்போம் என்றும் கூறப்பட்டுள்ளது.
கொண்டாட்டமும் சோகமும்...
ஐபிஎல் வரலாற்றில் ஆர்சிபி அணி தனது முதல் கோப்பையை கடந்த சீசனில் ரஜத் படிதார் தலைமையில் வென்றது.
இந்த வெற்றிக் கொண்டாட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்தனர். அதற்குப் பிறகு எந்தப் பதிவும் இடாத நிலையில், தற்போது சுமார் மூன்று மாதங்களுக்குப் பிறகு பதிவிட்டுள்ளது.
ஆர்சிபியின் சின்னசாமி திடலில் இனிமேல் போட்டிகள் நடைபெறாதென நீதிமன்றமும் உதவிட்டதும் குறிப்பிடத்தக்கது.
ஜூன் 4-ஆம் தேதி எல்லாமே மாறிவிட்டது...
ஆர்சிபியின் பதிவில் கூறியிருப்பதாவது:
எங்களது அணியின் டுவெல்த் மேன் ஆர்மி (12-ஆவது வீரர்களான ரசிகர்களைக் குறிப்பிடுகிறார்கள்) இதயம் கனிந்த கடிதம்! சுமார் மூன்று மாதங்களுக்குப் பிறகு இங்குப் பதிவிடுகிறோம்.
அமைதியாக இருந்தது இல்லாமல் ஆக்கிவிடாது. அது துயரத்தினால் இருந்தது. இந்தக் காலக்கட்டத்தில் ஆற்றல், நினைவுகள், கணங்கள் என எல்லாமே நிறைந்திருந்தது. ஆனால், ஜூன் 4-ஆம் தேதி எல்லாவற்றையும் மாற்றிவிட்டது.
அந்த நாளில் எங்களது இதயங்கள் நொருங்கிவிட்டன. அப்போதிருந்து எங்களது அமைதி அந்தக் காலத்தைப் பிடித்திருக்க வைத்தது.
அக்கறையுடன் வந்திருக்கிறோம்...
அந்த அமைதியில் நாங்கள் துயருற்றோம், கவனித்தோம், கற்றுக்கொண்டோம். மெதுவாக, நாங்கள் நம்பும் ஒன்றை பொறுப்புடன் உருவாக்கினோம். அடப்படித்தான் ’ஆர்சிபி கேர்ஸ்’ உருவானது.
இது ரசிகர்களுக்காக மரியாதை, ஆறுதலைத் தாண்டி அவர்களது துயரத்தில் உடன் நிற்பதாகும். இந்த அமைப்பின் மூலம் ஆர்சிபி ரசிகர்களுக்கும் இந்தச் சமூகத்திற்கும் அர்த்தமுள்ள செயலாக அமையும்.
நாங்கள் இங்கு கொண்டாட வரவில்லை, அக்கறையுடன் வந்திருக்கிறோம். ஒன்றாக இணைந்து நடக்க வந்திருக்கிறோம். தொடர்ந்து கர்நாடகத்தின் பெருமையாக இருப்போம். ஆர்சிபி கேர்ஸ். எப்போதும் அப்படியாகவே இருப்போம் எனக் குறிப்பிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.