2 வது டி20: டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது இந்தியா!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ததைப் பற்றி...
சூர்யகுமார் யாதவ் - மார்க்ரம்.
சூர்யகுமார் யாதவ் - மார்க்ரம்.
Updated on
1 min read

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.

முதல் போட்டியில் 101 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி அதே வேட்கையுடன் இரண்டாவது போட்டியை வெல்லும் முனைப்பில் களமிறங்கியுள்ளது.

இவ்விரு அணிகளும் மோதும் இரண்டாவது போட்டி பஞ்சாப் மாநிலம் நியூ சண்டீகரின் முல்லான்பூர் கிரிக்கெட் திடலில் இன்று (டிச.11) நடைபெறுகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் முதலில் பந்து வீசுவதாகத் தெரிவித்துள்ளார்.

தென்னாப்பிரிக்க அணியில் ஸ்டப்ஸ், மஹராஜ் மற்றும் நார்ட்ஜே ஆகியோர் நீக்கப்பட்டு, ரீசா ஹென்டிரிக்ஸ், லிண்டே மற்றும் பார்ட்மேன் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்திய அணியில் எந்த வித மாற்றமும் செய்யப்படவில்லை. விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு மீண்டும் வாய்ப்பு மறுக்கப்பட்டு ஜிதேஷ் சர்மா அணியில் தொடர்கிறார்.

இந்திய அணி விவரம்:

அபிஷேக் சர்மா, ஷுப்மன் கில், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), திலக் வர்மா, ஹார்திக் பாண்டியா, ஷிவம் துபே, ஜித்தேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), அக்‌ஷர் படேல், ஜஸ்பிரித் பும்ரா, வருண் சக்கரவர்த்தி, அர்ஷ்தீப் சிங்.

தென்னாப்பிரிக்க அணி விவரம்

ரீசா ஹென்ட்ரிக்ஸ், குயின்டன் டி காக்(விக்கெட் கீப்பர்), எய்டன் மார்க்ரம்(கேப்டன்), டெவால்டு ப்ரீவிஸ், டேவிட் மில்லர், டொனோவன் ஃபெரீரா, ஜார்ஜ் லிண்டே, மார்கோ யான்சன், லூத்தோ சிபம்லா, லுங்கி இன்கிடி, ஒட்னீல் பார்ட்மேன்.

சூர்யகுமார் யாதவ் - மார்க்ரம்.
கொல்கத்தாவில் மெஸ்ஸிக்கு 70 அடி உயர பிரமாண்ட சிலை!
Summary

India captain Suryakumar Yadav wins toss, opts to bowl against South Africa in Mullanpur

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com