

யு-19 ஆசிய கோப்பையில் இந்திய வீரர் வைபவ் சூர்யவன்ஷி அதிரடியாக சதம் விளாசியுள்ளார்.
யுஎஇ-க்கு எதிரான இந்தப் போட்டியில் இந்திய அணி 27 ஓவர்களில் 220/1 ரன்கள் எடுத்துள்ளது.
யு-19 ஆசிய கோப்பையின் முதல் போட்டியில் இந்தியாவும் யுஎஇ அணியும் துபையில் விளையாடி வருகின்றன.
டாஸ் வென்ற யுஎஇ பந்துவீச்சைத் தேர்வு செய்தது. தொடக்க வீரர் ஆயுஷ் மாத்ரே 4 ரன்களுக்கு ஆட்டமிழக்க வைபவ் சூர்யவன்ஷியும் ஆரோன் ஜார்ஜும் அதிரடியாக விளையாடி வருகிறார்கள்.
சூர்யவன்ஷி 140 ரன்களுடனும் ஆரோன் ஜார்ஜ் 68 ரன்களுடனும் விளையாடி வருகிறார்கள்.
அடுத்தாண்டு யு-19 ஒருநாள் உலகக் கோப்பை வரவிருப்பதால் ஆசிய கோப்பை தொடர் இவ்வாறாக அமைக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.