

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா அவரது மனைவி ரித்திகாவுக்கு இன்ஸ்டாகிராம் பதிவு மூலம் அழகான வாழ்த்து செய்தியை பகிர்ந்துள்ளார்.
இந்திய அணியின் மூத்த வீரர்களில் ஒருவரான ரோஹித் சர்மாவுக்கும், ரித்திகாவுக்கும் கடந்த 2015 ஆம் ஆண்டு டிசம்பர் 13 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவருக்கும் திருமணமாகி இன்றுடன் 10 ஆண்டுகள் நிறைவடைகின்றன.
இந்த நிலையில், திருமணமாகி 10 ஆண்டுகள் நிறைவடைந்ததன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா இன்ஸ்டாகிராம் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது: 10 ஆண்டுகளுக்கு முன்பு நம்முடைய திருமண பயணம் எப்படி இருக்கப் போகிறது என்று தெரியால் நமக்குள்ளே சத்தியம் செய்து கொண்டோம். ஆனால், 10 ஆண்டுகளுக்குப் பிறகு, கடந்த 10 ஆண்டுகள்தான் என்னுடைய வாழ்வின் மிகவும் சிறந்த பகுதி என என்னால் எளிதில் கூறிவிட முடியும். இந்த 10 ஆண்டுகளில் நாம் இருவரும் மறக்க முடியாத சிறப்பான நினைவுகளை உருவாக்கியுள்ளோம். இந்த மகிழ்ச்சி எப்போதும் நீடிக்க வேண்டும். லவ் யூ எனக் கூறியுள்ளார்.
இந்த இன்ஸ்டாகிராம் பதிவுடன் ரித்திகாவுடன் இருக்கும் அழகான புகைப்படங்கள் சிலவற்றையும் அவர் பகிர்ந்துள்ளார். ரோஹித் சர்மா - ரித்திகா தம்பதிக்கு சமைரா மற்றும் அஹான் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டனான ரோஹித் சர்மா சர்வதேச டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றதையடுத்து, இந்திய அணிக்காக அவர் தொடர்ந்து ஒருநாள் போட்டிகளில் மட்டும் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.