

ஆஷஸ் கிரிக்கெட் போட்டி 2025-26: மூன்றாவது ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பொறுமையாக விளையாடி வருகிறார்.
அடிலெய்டில் நடைபெற்றுவரும் மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 371 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியது.
அடுத்து, தனது முதல் இன்னிங்ஸை விளையாடிவரும் இங்கிலாந்து அணி இரண்டாம் நாள் முடிவில் 213/8 ரன்கள் எடுத்துள்ளது.
பேஸ்பால் விளையாடாத கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மட்டுமே 151 பந்துகளில் 45 ரன்கள் எடுத்து பொறுமையாக விளையாடி வருகிறார்.
ஜோஃப்ரா ஆர்ச்சர் அதிரடியாக 30 ரன்கள் எடுத்து ஸ்டோக்ஸுடன் இணைந்து அணியைக் காப்பாற்றினார்.
முதல் இன்னிங்ஸில் ஆஸி. பேட்டிங்
அலெக்ஸ் கேரி - 106
உஸ்மன கவாஜா - 82
மிட்செல் ஸ்டார்க் -54*
பந்துவீச்சு
ஜோஃப்ரா ஆர்ச்சர் - 5 விக்கெட்டுகள்
பிரைடன் கார்ஸ், வில் ஜாக்ஸ் -2 விக்கெட்டுகள்
முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து
ஹாரி புரூக் - 45
பென் ஸ்டோக்ஸ் - 45*
ஜோஃப்ரா ஆர்ச்சர்- 30*
பந்துவீச்சு
பாட் கம்மின்ஸ் - 3 விக்கெட்டுகள்
ஸ்காட் போலண்ட், நாதன் லயன் - 2 விக்கெட்டுகள்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.