

அடிலெய்டு டெஸ்ட்டின் நான்காம் நாள் ஆட்டத்தின் முடிவில் இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 207 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற இன்னும் 228 ரன்கள் தேவையாக இருக்கிறது.
மீதமுள்ள ஒரு நாளில் ஆஸ்திரேலிய வெற்றிபெற 4 விக்கெட்டுகள் தேவையாகவும் இருக்கிறது.
மூன்றாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டி அடிலெய்டில் கடந்த டிச.16 முதல் நடைபெற்று வருகிறது.
இரண்டாம் இன்னிங்ஸில் வலுவான நிலையில் இருந்த ஆஸ்திரேலிய அணி நான்காம் நாளான இன்று உடனுக்குடன் விக்கெட்டுகளை இழந்து 349க்கு ஆல் அவுட்டானது.
இரட்டைச் சதம் அடிக்கும் வாய்ப்பிருந்தும் டிராவிஸ் ஹெட் 170க்கு ஆட்டமிழக்க, சதம் அடிக்கும் வாய்ப்பிருந்த அலெக்ஸ் கேரி 72 ரன்களிலும் ஆட்டமிழந்து சொதப்பினார்கள்.
நான்காம் நாளான இன்று இங்கிலாந்து சார்பில் பிரைடன் கார்ஸ் சிறப்பாக பந்துவீசினார்.
மொத்தமாக இரண்டாவது இன்னிங்ஸில் ஜோஷ் டங் 4, பிரைடன் கார்ஸ் 3, ஜேக்ஸ், ஸ்டோக்ஸ், ஆர்ச்சர் தலா 1 விக்கெட்டும் எடுத்தார்கள்.
இங்கிலாந்து அணி இரண்டாம் இன்னிங்ஸ் பேட்டிங்கில் அதிகபட்சமாக ஜாக் கிராவ்லி 84, ஜோ ரூட் 39 ரன்கள் எடுத்தார்கள்.
ஆஸி. சார்பில் பாட் கம்மின்ஸ், நாதன் லயன் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.