

இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடருக்கு முன்பாக இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் பேசியுள்ளார்.
இலங்கை அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த தொடர் நாளை (டிசம்பர் 21) முதல் தொடங்குகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் போட்டி விசாகப்பட்டினத்தில் நாளை நடைபெறுகிறது.
இந்த நிலையில், ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற பிறகு மீண்டும் எப்போது இந்திய அணிக்காக ஆடுகளத்தில் களமிறங்கி விளையாடுவோம் என ஆவலுடன் காத்திருந்ததாக இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற பிறகு, நாள்கள் மிகவும் பரபரப்பானதாக இருந்தது. ஆனால், ஒவ்வொரு உலகக் கோப்பைத் தொடருக்குப் பிறகும் இதுபோன்ற பரபரப்பான நாள்களை நான் விரும்புவதால் அவை அனைத்தும் பெரிதாகத் தெரியவில்லை.
இந்திய அணிக்காக மீண்டும் எப்போதும் ஆடுகளத்தில் களமிறங்கி விளையாடுவோம் என்பதை ஆவலுடன் எதிர்பார்த்து ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம். இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் விளையாடவுள்ளோம். நாளை நடைபெறவுள்ள முதல் டி20 போட்டியை ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கிறோம். இந்த தொடர் எங்களுக்கு மிகவும் முக்கியமான தொடர். எங்களுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றார்.
கடந்த நவம்பர் 2 ஆம் தேதி நவி மும்பையில் நடைபெற்ற ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: ரோஹித் சர்மாவின் சாதனையை முறியடித்த திலக் வர்மா!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.