

விஜய் ஹசாரே தொடரில் ஃபீல்டிங்கின்போது காயமடைந்த மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர் அங்க்ரிஷ் ரகுவன்ஷி மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார்.
விஜய் ஹசாரே கிரிக்கெட் தொடரில் மும்பை மற்றும் உத்தரகண்ட் இடையேயான போட்டி ஜெய்பூரில் இன்று (டிசம்பர் 26) நடைபெற்றது. இந்தப் போட்டியில் மும்பை அணி 51ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் ஃபீல்டிங்கின்போது, மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர் அங்க்ரிஷ் ரகுவன்ஷி பந்தை பிடிக்க முயன்றபோது, தோள்பட்டை மற்றும் கழுத்தில் பலமாக அடிபட்டது. அவர் உடனடியாக ஃபீல்டிங்கிலிருந்து வெளியேறினார்.
ஆட்டத்தின் 30-வது ஓவரை சுழற்பந்துவீச்சாளர் தனுஷ் கோட்டியான் வீச, உத்தரகண்ட் வீரர் சௌரப் ரௌத் பேட்டிங் செய்தார். அந்த ஓவரில் சௌரப் பவுண்டரிக்கு அடிக்க முயன்ற பந்தை பிடிக்க முயன்று ரகுஷன்ஷிக்கு காயம் ஏற்பட்டது.
ஃபீல்டிங்கிலிருந்து வெளியேறிய ரகுவன்ஷி உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவருக்கு தேவையான ஸ்கேன்கள் அனைத்தும் எடுக்கப்பட்டன. அவரது உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.