

இலங்கைக்கு எதிரான டி20 தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அணியில் ஆல ரவுண்ரர் ஷதாப் கான் சேர்க்கப்பட்டுள்ளார். இருந்தும் பாபர் அசாம், ஷாஷீன் ஷா அஃப்ரிடியை அழைக்கவில்லை என்பது பேசுபொருளாகியுள்ளது.
சமீபத்தில் இலங்கை அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் செய்து விளையாடியது.
தற்போது, பாகிஸ்தான் அணி 3 டி20 போட்டிகளில் விளையாட இலங்கைக்குச் செல்கிறது. இந்தப் போட்டிகள் வரும் ஜன.7 முதல் தொடங்குகின்றன.
காயத்தினால் பல மாதங்களாக விலகியிருந்த ஷதாப் கான் மீண்டும் பாகிஸ்தான் டி20 அணிக்குத் திரும்புகிறார்.
முக்கியமான பாகிஸ்தான் வீரர்கள் ஆஸ்திரேலியாவில் பிபிஎல் போட்டிகளில் விளையாடி வருகிறார்கள்.
பாகிஸ்தான் அணி 2026 டி20 உலகக் கோப்பையின் அனைத்து போட்டிகளையும் இலங்கையில் விளையாட இருக்கிறது. இதனால், மூத்த வீரர்கள் இந்தத் தொடரில் பங்கேற்க ஆவலுடன் இருக்கிறார்கள்.
இருப்பினும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கிரிக்கெட் ஆஸ்திரேலியாவிடம் இந்த சீசன் முழுவதும் தங்களது வீரர்கள் விளையாடுவார்கள் என உறுதி அளித்துள்ளதால், தற்போது இருக்கும் அணியை வைத்து இலங்கைத் தொடருடன் விளையாட முடிவெடுத்திருக்கிறது.
பாகிஸ்தான் டி20 அணி: சல்மான் அலி அகா (கேப்டன்), அப்துல் சமாத், சையம் அயூப், சஹாஜாதா ஃபர்ஹாம், ஃபக்கர் ஸமான், ஷதாப் கான், ஃபமீம் அஸ்ரஃப், முகமது நவாஸ், அப்ரார் அகமது, உஸ்மான் தரிக், உஸ்மான் கான், கவாஜா நஃபி, நசீம் ஷா, சல்மான் மிர்ஜா, முகமது வாசீம் ஜூனியர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.