

பாகிஸ்தான் வேகப் பந்துவீச்சாளர் ஷாஹீன் ஷா அஃப்ரிடி காயம் காரணமாக பிபிஎல் தொடரில் இருந்து விலகினார்.
இலங்கை டி20 தொடரில் தேர்வாகாமல் இருந்த அப்ஃரிடி தற்போது பாகிஸ்தானுக்குச் சென்றுள்ளார்.
பிபிஎல் தொடரில் பிரிஸ்பேன் ஹீட் அணிக்காக விளையாடி வந்த ஷாஹீன் ஷா அஃப்ரிடிக்கு முட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக பாகிஸ்தானுக்குத் திரும்பினார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அவரை லாகூரில் உள்ள உயர் சிகிச்சை மையத்துக்கு அழைத்துள்ளது.
இலங்கை டெஸ்ட்டில் ஃபீல்டிங்கின் போது முட்டியில் காயம் ஏற்பட்டது. 2021-22 வரை அதனால் அவர் விளையாடாமல் இருந்தார்.
ஷாஹீன் ஷா தனது முதல் போட்டியில் இரண்டு நோ பால் வீசியதால் வெளியேற்றப்பட்டார். 4 போட்டிகளில் 2 விக்கெட்டுகள் எடுத்திருந்தார்.
இலங்கைக்கு எதிரான டி20 தொடர் வரும் ஜன.7- 11 வரை நடைபெற இருக்கிறது. டி20 உலகக் கோப்பைப் போட்டிகள் வரும் பிப்.7 முதல் மார்ச்.8ஆம் தேதி வரை நடைபெற இருக்கின்றன.
இந்தக் காயத்தினால் அவர் டி20 உலகக் கோப்பையில் விளையாடிவதில் சந்தேகம் எழுந்துள்ளது.
இது குறித்து அவர் கூறியதாவது:
பிரிஸ்பேன் அணிக்காக விளையாடுவதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. இந்த சீசனை முடிக்காதது எனக்கு மிகுந்த வருத்தமாக இருக்கிறது. விரைவில் களத்துக்கு வருவேன் எனக் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.