அதிவேக 6000* ரன்கள்..! விராட் கோலியின் சாதனையை முறியடித்தார் பாபர் அசாம்!

விராட் கோலியின் சாதனையை முறியடித்தார் பாபர் அசாம்..
பாபருடன் விராட் கோலி...
பாபருடன் விராட் கோலி...
Published on
Updated on
1 min read

பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் பாபர் அசாம் ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 6000 ரன்களைக் கடந்து சாதனை படைத்துள்ளார்.

சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்னதாக பாகிஸ்தான் - நியூசிலாந்து - தென்னாப்பிரிக்கா அணிகள் முத்தரப்பு ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றன. நியூசிலாந்து அணி 2 போட்டிகளில் வெற்றிபெற்றும், பாகிஸ்தான் அணி ஒரு போட்டியில் வெற்றி, ஒன்றில் தோல்வியுடன் இரு அணிகளும் இறுதிப் போட்டிக்கு முன்னேறின.

இந்த நிலையில், இந்த முத்தரப்பு தொடரில் சாம்பியன்ஸ் யார் என்பதைத் தீர்மானிக்கும் இறுதிப் போட்டி கராச்சியில் இன்று(பிப்ரவரி 14) நடைபெற்றுவருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் முகமது ரிஸ்வான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி, பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் பாபர் அசாம் 29 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

இதையும் படிக்க... காயத்தில் இருந்து மீண்ட ரச்சின்! தொடக்க ஆட்டத்தில் விளையாடுவாரா?

மேலும், இந்தப் போட்டியில் அசாம் 10 ரன்கள் எடுத்தபோது ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 6000 ரன்களைக் கடந்தவர் என்ற தென்னாப்பிரிக்க வீரர் ஹசிம் ஆம்லாவின் சாதனையையும் சமன் செய்தார். அதுமட்டுமின்றி இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியின் சாதனையையும் முறியடித்துள்ளார் பாபர் அசாம்.

ஒருநாள் போட்டிகளில் வேகமாக 6000 ரன்கள் எடுத்த வீரர்கள்

  • பாபர் அசாம்* - 123 இன்னிங்ஸ்

  • ஹஷிம் ஆம்லா-123 இன்னிங்ஸ்

  • விராட் கோலி-136 இன்னிங்ஸ்

  • கேன் வில்லியம்சன் -139 இன்னிங்ஸ்

  • டேவிட் வார்னர் -139 இன்னிங்ஸ்

  • ஷிகர் தவான் -140 இன்னிங்ஸ்

  • விவ் ரிச்சர்ட்ஸ் -141 இன்னிங்ஸ்

  • ஜோ ரூட் -141 இன்னிங்ஸ்

இதையும் படிக்க... சாம்பியன்ஸ் டிராபி: பரிசுத் தொகை விவரம்..!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com