
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் முகத்தில் பந்து தாக்கி காயம் அடைந்த நியூசிலாந்து ஆல் ரவுண்டர் ரச்சின் ரவீந்திரா மீண்டும் பயிற்சியைத் தொடங்கியுள்ளார்.
இந்தியா, பாகிஸ்தான் உள்பட 8 அணிகள் பங்கேற்கும் 9-வது சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானின் கராச்சி, லாகூர், ராவல்பிண்டி ஆகிய மைதானங்களில் நடைபெறவிருக்கிறது.
இந்திய அணிக்கான போட்டிகள் மட்டும் ஐக்கிய அமீரகத்தின் துபையில் நடைபெறுகிறது. பாகிஸ்தான்- நியூசிலாந்து அணிகள் மோதும் முதலாவது போட்டி வருகிற 19 ஆம் தேதி தொடங்குகிறது. இந்தப் போட்டி தொடர் மார்ச் 9 ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. அதற்கு முன்னதாக பாகிஸ்தான் - நியூசிலாந்து - தென்னாப்பிரிக்கா அணிகள் முத்தரப்பு ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றன.
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் போதிய வெளிச்சமின்மைக் காரணமாக பீல்டிங் போது பந்தைப் பிடிக்க முயன்றபோது நெற்றியில் காயம் ஏற்பட்டு ரத்தம் சொட்டும் காட்சியில் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின.
இந்த நிலையில், ரச்சின் ரவீந்திரா நியூசிலாந்து அணியுடன் மீண்டும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இருப்பினும், அவருக்கு மூளையதிர்ச்சி குறித்த சோதனைகள் இருப்பதாக பயிற்சியாளர் கேரி ஸ்டெட் தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்து அணி முத்தரப்பு தொடரில் விளையாடிவரும் நிலையில், இறுதிப் போட்டியில் ரச்சின் ரவீந்திரா அணியில் இடம்பெறவில்லை.
இதுகுறித்து பயிற்சியாளர் கேரி ஸ்டெட் கூறும்போது, “தலையின் காயம் குறித்து முதல் தகவல் அறிக்கையில், அவருக்கு தலைவலி சம்பந்தமான பிரச்சினைகள் எதுமில்லை என்றாலும், சில நாள்களுக்குப் பின்னர் அவர் கடுமையான தலைவலியால் அவதியடைந்துள்ளார். இதனால், அந்த சோதனையில் அவர் தேர்ச்சி பெற்றால் மட்டுமே மீண்டும் விளையாட முடியும்.
அவருக்கு சில நாள்களாகவே தலைவலி இருந்து வருகிறது. ஆனால், இப்போது குறைந்துள்ளது நல்ல செய்தி. நேற்றிரவு அவர் சில பந்துகளை எதிர்கொண்டார். ஆனால், அவருக்கான சோதனைகள் இன்னும் இருக்கின்றன. அதன்பின்னர் அவர் விளையாடுவது குறித்து முடிவெடுக்கப்படும்” என்றார்.
முத்தரப்பு தொடரில் பங்கேற்காத வேகப்பந்து வீச்சாளர் லோக்கி பெர்குசன் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2000 ஆம் ஆண்டு கென்யாவின் நடந்த போட்டியில் முதல் சாம்பியன்ஸ் டிராபியை வென்ற நியூசிலாந்து அணி இரண்டாவது முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.