கோலாகலமாக தொடங்கிய டி20 உலகக் கோப்பை.. தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தான் பந்துவீச்சு!

டி20 உலகக் கோப்பையின் தொடக்க ஆட்டத்தில் டாஸ் வென்று பாகிஸ்தான் பந்துவீச்சு தேர்வு செய்துள்ளதைப் பற்றி...
சல்மான் அலி அகா - ஸ்காட் எட்வர்ட்ஸ்
சல்மான் அலி அகா - ஸ்காட் எட்வர்ட்ஸ்படம்: ஏபி.
Updated on
1 min read

கோலாகலமாக தொடங்கிய டி20 உலகக் கோப்பையின் சனிக்கிழமை நடைபெற்றுவரும் தொடக்க ஆட்டத்தில் டாஸ் வென்று பாகிஸ்தான் அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது.

கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த டி20 உலகக் கோப்பை இந்தியா மற்றும் இலங்கையில் இன்று ஆரவாரத்துடன் தொடங்குகிறது. இந்தியாவும் இலங்கையும் இணைந்து இந்த உலகக்கோப்பையை நடத்தும் இந்தத் தொடரில் மொத்தமாக 20 அணிகள் 4 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

குரூப் ஏ-வில் இந்தியா, அமெரிக்கா, நமீபியா, பாகிஸ்தான், நெதர்லாந்து ஆகிய அணிகளும், குரூப் பி-யில் ஆஸ்திரேலியா, இலங்கை, அயர்லாந்து, ஜிம்பாப்வே, ஓமன் ஆகிய அணிகளும், குரூப் சி-யில் இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள், ஸ்காட்லாந்து, இத்தாலி, நேபாளம் ஆகிய அணிகளும், குரூப் டி பிரிவில் தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, ஐக்கிய அரபு அமீரகம், கனடா ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன.

லீக் சுற்றின் முதல் போட்டி இலங்கையில் உள்ள கொழும்பு எஸ்.எஸ்.சி. கிரிக்கெட் திடலில் சனிக்கிழமை தொடங்கியது. முதல் போட்டியில் குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன.

இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் சல்மான் அலி அகா முதலில் பந்துவீசுவதாகத் தெரிவித்தார். இந்தப் போட்டி மழையால் பாதிக்கப்படும் எனக் கணிக்கப்பட்டுள்ள நிலையில், இரண்டாவது பேட்டிங் ஆடும் அணிக்கு கைகொடுக்கும் என்ற நோக்கில் பாகிஸ்தான் அணி பந்து வீச்சைத் தேர்வு செய்துள்ளது.

பாகிஸ்தான் அணி விவரம்

சைம் அயூப், சாஹிப்சாதா ஃபர்ஹான், சல்மான் அகா (கேப்டன்), பாபர் அசாம், உஸ்மான் கான் (விக்கெட் கீப்பர்), ஷதாப் கான், முகமது நவாஸ், ஃபஹீம் அஷ்ரஃப், ஷஹீன் அப்ரிடி, சல்மான் மிர்சா, அப்ரார் அகமது.

நெதர்லாந்து அணி விவரம்

மேக்ஸ் ஓ'டவுட், மைக்கேல் லெவிட், பாஸ் டி லீட், ஸ்காட் எட்வர்ட்ஸ் (கேப்டன் - விக்கெட் கீப்பர்), காலின் ஆக்கர்மேன், சாக் லயன் கேசெட், வான் பீக், ரோலோஃப் வான் டெர் மெர்வே, ஆர்யன் தட், கைல் க்ளீன், பால் வான் மீகெரென்.

சல்மான் அலி அகா - ஸ்காட் எட்வர்ட்ஸ்
டி20 உலகக் கோப்பை: ஹர்ஷித் ராணா விலகல், மாற்று வீரர் அறிவிப்பு

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com