
10 ஆண்டுகளுக்கும் மேலான நீண்ட இடைவெளிக்குப் பிறகு சச்சின் டெண்டுல்கர் மற்றும் யுவராஜ் சிங் இருவரும் இந்திய அணியின் சீருடையில் களமிறங்கவுள்ளனர்.
சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் கிரிக்கெட் தொடர் நாளை (பிப்ரவரி 22) தொடங்கவுள்ளது. தொடரின் முதல் போட்டியில் இந்தியா மாஸ்டர்ஸ் அணி இலங்கை மாஸ்டர்ஸ் அணியை எதிர்த்து விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்தப் போட்டி நவி மும்பையில் நடைபெறுகிறது.
இந்திய அணியின் முன்னாள் வீரர்களான சச்சின் டெண்டுல்கர் மற்றும் யுவராஜ் சிங் இருவரும் இந்திய அணிக்காக 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பையின்போது, ஒன்றாக இணைந்து விளையாடினர். தற்போது கிட்டத்தட்ட 14 ஆண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் இவர்கள் இருவரும் இந்திய அணியின் சீருடையை அணிந்து விளையாடவுள்ளனர்.
சச்சின் டெண்டுல்கர் சர்வதேச கிரிக்கெட்டில் 34 ஆயிரம் ரன்களுக்கும் அதிகமாக குவித்துள்ளார். அதேபோல, 100 சதங்களை விளாசியுள்ளார். அனைத்து வடிவிலான போட்டிகளிலும் ஆதிக்கம் செலுத்தினாலும், இந்திய அணிக்காக ஒரே ஒரு டி20 போட்டியில் மட்டுமே அவர் விளையாடியுள்ளார். இந்த நிலையில், அவர் மீண்டும் இந்திய அணியின் சீருடையில் டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க: முகமது ஷமிக்கு ரிக்கி பாண்டிங் புகழாரம்!
சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் கிரிக்கெட் தொடரில் இந்தியா உள்பட 6 அணிகள் கலந்து கொண்டு விளையாடுகின்றன. இந்தியா தவிர்த்து, இலங்கை, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் இந்தத் தொடரில் இடம்பெற்று விளையாடுவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.