சாம்பியன்ஸ் டிராபியில் மழையின் காரணமாக ஆஸி.-தெ.ஆ. ஆட்டம் தொடங்கபடவில்லை என்பதால் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளார்கள்.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ராவல்பிண்டியில் நடைபெறும் இன்றையப் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.
ராவல்பிண்டியில் மழை பெய்து வருவதால் போட்டிக்கான டாஸ் சுண்டப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இந்த மழையின் காரணமாக போட்டி நடைபெறுவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஒருவேளை ஆட்டம் நடைபெறாவிட்டால் ஆஸி. அணிக்கும் தென்னாபிரிக்கா அணிக்கும் யார் அரையிறுதிக்கும் செல்வார்கள் என்பதில் சிக்கல் ஏற்படுமென கணிக்கப்படுகிறது.
2 (+2.140) புள்ளிகளுடன் குரூப் பி பிரிவில் தெ.ஆ. முதலிடத்திலும் ஆஸி. 2 (+0.475) புள்ளிகளுடன் 2ஆம் இடத்திலும் இருக்கின்றன.
என்னென்ன வாய்ப்புகள் இருக்கின்றன?
1. வெற்றியினால் மாற்றம் வரும்
போட்டி நடைபெறாவிட்டால் இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளிகள் அளிக்கப்படும். கடைசி போட்டியில் இரு அணிகளும் வென்றால் இரண்டுமே அரையிறுதிக்கு தகுதிபெறும்.
2. தெ.ஆ.வெற்றி, ஆஸி. தோல்வியடைந்தால் என்னாகும்?
இங்கிலாந்துடன் தென்னாப்பிரிக்கா வென்றாலும் ஆப்கானிஸ்தானுடன் ஆஸி. தோற்றாலும் தென்னாப்பிரிக்கா அரையிறுதிக்கு தகுதிபெறும்.
இங்கிலாந்து - ஆப்கானிஸ்தான் போட்டி பிப்.26இல் நடைபெறும். இது அரையிறுதிக்கான முக்கிய போட்டியாக இருக்கும்.
இதில் இங்கிலாந்து வென்றால் ஆஸி. 3 புள்ளிகளுடனே அரையிறுதிக்கு தகுதிபெறும்.
3. ஆஸி. வெற்றி, தெ.ஆ. தோல்வியடைந்தால் என்னாகும்?
இங்கிலாந்துடன் தென்னாப்பிரிக்கா தோல்வியும் ஆப்கானிஸ்தானுடன் ஆஸி. வென்றாலும் ஆஸி. அரையிறுதிக்கு தகுதிபெறும்.
ஆப்கன் இங்கிலாந்தை வீழ்தினால் 3 புள்ளிகளுடன் தெ.ஆ. தகுதிபெறும்.
இங்கிலாந்து, ஆப்கன் ஒரேயொரு போட்டிகளில் மட்டும் வென்றால் இரண்டுமே வெளியேறும்.
4. ஆஸி., தெ.ஆ. தோல்வியடைந்தால் என்னாகும்?
ஆஸி. தெ.ஆ. இரண்டும் தோல்வியுற்றால் ஆப்கன் - இங்கிலாந்து ஆட்டதில் ஒரு அணி அரையிறுதிக்கு தகுதிபெறும்.
2ஆவது அணியாக ரன் ரேட் விகிதத்தில் ஆஸி. அல்லது தெ.ஆ. தேர்வாகும்.
முடிவு
மழையினால் ஆட்டம் ரத்தானால் அரையிறுதிக்கான வாய்ப்புகள் மேலும் கடினமாகும். இந்தப் போட்டி குறைவான ஓவர்கள் உடனாவது நடைபெற்றால் யார் வெற்றி பெறுகிறார்கள் அவர்கள் அரையிறுதிக்கு தகுதிபெறுவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அரையிறுதியில் பெகுலா-இவா, மடிஸன் கீஸ்-யுலியா மோதல்

நடப்பு உலக சாம்பியனை வீழ்த்தினாா் விஸ்வநாத்: அரையிறுதியில் அங்குஷிதா, சச்சின், நரேந்தா்
அயபோங்கா, ரெனிகே அசத்தல்; வென்றது தென்னாப்பிரிக்கா!

குரூப் பி பிரிவில் இந்தியா முதலிடம்: அரையிறுதிக்கு தகுதி
வீடியோக்கள்

உண்மையான காங்கிரஸ் தவெகவுடன் நிற்கிறது! | Vijay full speech | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு


