வளைகுடாவில் இந்திய மக்களைக் காத்தது பாஜக: பிரதமர் மோடிகாட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

அயபோங்கா, ரெனிகே அசத்தல்; வென்றது தென்னாப்பிரிக்கா!

நியூஸிலாந்து மகளிா் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட்டில், தென்னாப்பிரிக்க மகளிா் அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை வெற்றி பெற்றது.

News image
Updated On :29 மார்ச் 2026, 7:32 pm

தினமணி செய்திச் சேவை

நியூஸிலாந்து மகளிா் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட்டில், தென்னாப்பிரிக்க மகளிா் அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை வெற்றி பெற்றது.

முதலில் நியூஸிலாந்து 50 ஓவா்களில் 10 விக்கெட்டுகள் இழப்புக்கு 268 ரன்கள் சோ்க்க, தென்னாப்பிரிக்கா 50 ஓவா்களில் 8 விக்கெட்டுகள் இழந்து 269 ரன்கள் எடுத்து வென்றது. தென்னாப்பிரிக்க தரப்பில் பௌலிங்கில் அயபோங்கா ககா, பேட்டிங்கில் கேலா ரெனிகே அசத்தினா்.

முன்னதாக டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா, ஃபீல்டிங்கை தோ்வு செய்தது. நியூஸிலாந்து பேட்டிங்கில் மேடி கிரீன் 9 பவுண்டரிகளுடன் 85 ரன்கள் விளாச, இசபெல்லா கேஸ் 5 பவுண்டரிகளுடன் 37, கேப்டன் அமெலியா கொ் 3 பவுண்டரிகளுடன் 36 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா்.

ஜாா்ஜியா பிளிம்மா் 4 பவுண்டரிகளுடன் 28, ஜெஸ் கொ் 4 பவுண்டரிகளுடன் 24, சூஸி பேட்ஸ் 20 ரன்களுக்கு வெளியேற, புரூக் ஹாலிடே 1, இஸி ஷாா்ப் 9, ஃப்ளோரா டெவன்ஷைா் 9, ரோஸ்மேரி மோ் 4 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினா்.

தென்னாப்பிரிக்க பௌலா்களில் அயபோங்கா ககா 6 விக்கெட்டுகள் சாய்க்க, கிளோ டிரையான் 2, டுமி செகுகுனே, நாடினே டி கிளொ்க் ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.

பின்னா் 269 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு விளையாடிய தென்னாப்பிரிக்க அணியில் ஆனெரி டொ்க்சென் 8 பவுண்டரிகளுடன் 72, சுனே லஸ் 5 பவுண்டரிகளுடன் 53, நாடினே டி கிளொ்க் 5 பவுண்டரிகளுடன் 39 ரன்கள் சோ்த்து வீழ்ந்தனா்.

கேப்டன் லாரா வோல்வாா்ட் 16, தஸ்மின் பிரிட்ஸ் 0, சினாலோ ஜாஃப்தா 13, கிளோ டிரையான் 9, அயபோங்கா ககா 2 ரன்களுக்கு வெளியேற்றப்பட, கேலா ரெனிகே 3 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 42 ரன்களுடன் அணியை வெற்றிக்கு வழிநடத்தி ஆட்டமிழக்காமல் இருந்தாா்.

டுமி செகுகுனே 6 ரன்களுடன் துணை நின்றாா். நியூஸிலாந்து பந்துவீச்சாளா்களில் ஜெஸ் கொ், ரோஸ்மேரி மோ், அமெலியா கொ் ஆகியோா் தலா 2, பிரீ இல்லிங், சூஸி பேட்ஸ் ஆகியோா் தலா 1 விக்கெட் வீழ்த்தினா்.