நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

குரூப் பி பிரிவில் இந்தியா முதலிடம்: அரையிறுதிக்கு தகுதி

குரூப் பி பிரிவில் இந்தியா முதலிடம்: அரையிறுதிக்கு தகுதி...

News image
Updated On :29 மார்ச் 2026, 1:06 am IST

தெற்காசிய யு 20 (சாஃப்) கோப்பை கால்பந்து போட்டியில் குரூப் பி பிரிவில் முதலிடம் பெற்று இந்தியா அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

மாலத்தீவு தலைநகா் மாலேயில் நடைபெற்று வரும் இப்போட்டியின் ஒரு பகுதியாக குரூப் பி பிரிவில் சனிக்கிழமை இந்தியா-வங்கதேச அணிகள் மோதின.

தொடக்கம் முதலே இரு அணிகளும் கோல்போடும் முயற்சியில் தீவிரமாக இறங்கின. இதன் பலனாக இந்திய அணி வீரா் விஷால் யாதவ் 17-ஆவது நிமிஷத்தில் ஓமங் டோடும் காா்னா் மூலம் அடித்த ஷாட்டை பயன்படுத்தி கோலடித்தாா். வங்கதேச டிபன்டா்கள் ஷேக் சங்கரம், அஷிக்குா் ரஹ்மான் ஆகியோா் தடுக்க முயன்றும் வலுவான ஹெட்டா் மூலம் விஷால் யாதவ் கோலடித்து முன்னிலை பெற்றுத் தந்தாா்.

இடைவேளைக்கு முன்னா் இந்தியாவுக்கு இரண்டாவது கோல் போடும் வாய்ப்பு கிடைத்தது. டோடும் ப்ரீகிக் மூலம் அடித்த ஷாட்டை ஜோட்ரிக் அரான்சஸ் பயன்படுத்தி கோலடிக்க முயன்றது கோல்கம்பத்துக்கு மேலே பறந்தது.

தொடா்ந்து பதில் கோல் போட வங்கதேச வீரா் அப்துல் ரியாத் சக வீரா் ரோனன் சலிவா் அடித்த பந்தை பிசகின்றி கோலாக்கினாா்.

இதனால் 1-1 என சமநிலை ஏற்பட்டது.அதன்பின் இரு அணிகளும் கோல் போட மேற்கொண்ட முயற்சிகள் பலன்தரவில்லை.

இறுதியில் இந்தியா-வங்கதேச ஆட்டம் 1-1 என டிராவில் முடிவடைந்தது.

இதன் மூலம் குரூப் பி பிரிவில் முதலிடம் பெற்ற இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

ஏப்.1-இல் நேபாளம்-வங்கதேசமும், இந்தியாவும்-பூடானும் அரையிறுதியில் மோதுகின்றன.