பாகிஸ்தான் அணியின் இடைக்கால பயிற்சியாளர் தோல்விக்கு காரணம் 2 வீரர்கள் காயத்தினால் வெளியேறியதே எனக் கூறியுள்ளார்.
நடப்பு சாம்பியனான பாகிஸ்தான் அணி சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளை நடத்துகின்றன. இந்திய அணிக்கான போட்டிகள் மட்டும் துபையில் நடைபெறுகின்றன.
பாகிஸ்தான் அணி 2 போட்டிகளிலும் தோல்வியுற்று அரையிறுதி வாய்ப்பை இழந்தது.
இதனால் பலரும் பாகிஸ்தான் அணியை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.
இது குறித்து பாகிஸ்தான் அணியின் இடைக்கால தலைமை பயிற்சியாளரும் தேசிய தேர்வுக்குழு உறுப்பினருமான ஆகிப் ஜாவேத் கூறியதாவது:
சிறப்பானவர்களையே தேர்வுக்குழு தேர்ந்தெடுத்துள்ளது
வீரர்களுக்கு போதிய அளவு ஊக்கம் இல்லை என்பது கவலையில்லை. இருக்கும் வீரர்களில் சிறப்பானவர்களையே தேர்வுக்குழு தேர்ந்தெடுத்துள்ளது.
சில வீரர்கள் அணிக்கு மிகவும் முக்கியமானவர்கள். சைம் அயூப், ஃபகார் ஸ்மான் இல்லாதது அணியில் தாக்கத்தை ஏற்படுத்தியது. அவர்கள் இல்லாத்தால் அதற்கேற்றார்போல் அணியை தேர்வு செய்ய வேண்டியிருந்தது.
ரசிகர்களும் கிரிக்கெட் வல்லுஞர்களும் டி20, ஒருநாள் போட்டி செயல்பாடுகளை கலவையாக சேர்த்து பேசுகிறார்கள். பல காரணங்களால் இந்தியா, பாகிஸ்தான் போட்டி உணர்ச்சிகரமாக இருக்கின்றன. அது ரசிகர்களை புண்படுத்தும் விதமாக அமைந்துவிட்டது வருந்தத்தக்கது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிஎஸ்கே அணியின் கேப்டன், தலைமைப் பயிற்சியாளர் பதவி விலகுவார்களா?

இந்திய அணியில் கம்பீர் நீக்கப்பட்ட பின்.. மௌனம் கலைத்த தேர்வுக்குழு முன்னாள் தலைவர்!

1/8: புதிய பயிற்சியாளர் வந்தபிறகு மான்செஸ்டர் யுனைடெட் அணியின் முதல் தோல்வி!

பாகிஸ்தான் அணிக்கு இளம் தலைமைப் பயிற்சியாளர் நியமனம்?
வீடியோக்கள்
தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சிக்கிறார்கள்! நயினார் நாகேந்திரனும் பதிலளித்த PTR
இணையதளச் செய்திப் பிரிவு

புதுவையில் ஸ்டாலின் பெயரைச் சொல்லாத ராகுல்!: Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

உண்மையான காங்கிரஸ் தவெகவுடன் நிற்கிறது! | Vijay full speech | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை


