சாம்பியன்ஸ் டிராபி தோல்வியால் கேப்டன் பொறுப்பு குறித்து பட்லர் சிந்திப்பதாகக் கூறியுள்ளார்.
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டின் 8-ஆவது ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் 8 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை ‘த்ரில்’ வெற்றி கண்டது.
முதலில் ஆப்கானிஸ்தான் 50 ஓவா்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 325 ரன்கள் சோ்க்க, இங்கிலாந்து 49.5 ஓவா்களில் 317 ரன்களுக்கே 10 விக்கெட்டுகளையும் இழந்தது.
இந்தத் தோல்வியினால் இங்கிலாந்து அணி சாம்பியன்ஸ் டிராபியிலிருந்து வெளியேறியது.
கேப்டனாக இருப்பது குறித்து சிந்திக்க வேண்டும்
இது குறித்து ஜாஸ் பட்லர் கூறியதாவது:
முன்னதாகவே தொடரிலிருந்து வெளியேறுவது வருத்தமாக இருக்கிறது. வெற்றிபெற வாய்ப்பிருந்தும் அதை விட்டுவிட்டோம்.
ஜோ ரூட் நம்பமுடியாத அளவுக்கு நன்றாக விளையாடினார். அழுத்தத்தை நன்றாக சமாளித்து ஆடினார். அவருக்கு துணையாக டாப் 6 பேட்டர்களில் யாரவது ஒருவர் உதவியிருக்க வேண்டும்.
உணர்ச்சிகரமாக இருப்பதால் இப்போது எதுவும் நான் சொல்ல விரும்பவில்லை. நான் என்னைப் பற்றியும் தொடக்க வீரர்கள் சிலர் குறித்தும் சிந்திக்க வேண்டும்.
கேப்டனாக இல்லாத போதும் நான் தலைமைப் பொறுப்பை ரசித்தேன். ஆனால் முடிவுகள் கடுமையாக இருக்கின்றன.
நான் பிரச்னையின் ஒரு பகுதியா?
நான் கேப்டன்சியை (தலைமைப் பொறுப்பை) ரசித்தேன். பலருக்கும் எனக்கு ஒத்துவராது என்றார்கள். ஆனால், நான் மகிழ்ச்சியாக செய்தேன். தோற்பது எனக்கும் பிடிக்கவில்லை. கண்ணாடியைப் பார்த்து 'நான் பிரச்னையின் ஒரு பகுதியா அல்லது தீர்வின் ஒரு பகுதியா?’ எனக் கேட்டுக் கொள்கிறேன். நான் அதைத்தான் தீர்க்க விரும்புகிறேன் எனக் கூறியுள்ளார்.
நிச்சயமாக அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்லவே நினைக்கிறோம். ஆனால், தோல்விகள் நீண்ட காலமாக ஏற்படும்போது கூடுதல் கனமாகிறது.
நம்பிக்கையுடன் இருக்கும் அணியே வெல்கிறது. அப்படிதான் விளையாட்டில் சில நேரங்களில் நடக்கின்றன.
நான் எனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தும்போது நான் தான் உலகத்திலேயே சிறந்த வீரர். ஆனால், தற்போது அந்த அளவுக்கு விளையாடுவதில்லை. நல்ல டச்சில் இருந்தாலும் ரன்களை குவிக்க முடியவில்லை. அதனால் வெறுப்பாக இருக்கிறது எனக் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அதிரடி அரைசதம்: ஃபார்முக்கு திரும்பிய ஜாஸ் பட்லர்!

தேர்தலில் போட்டியிடாதது ஏன்? அண்ணாமலை விளக்கம்

காதல் தோல்வியால் விரக்தி: வந்தே பாரத் மீது கல் வீசியவா் கைது

கிரிக்கெட்டில் இருந்து தற்காலிகமாக ஓய்வெடுத்தது ஐபிஎல் 2026க்கு உதவும்: பட்லர்
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


