
டி20 கிரிக்கெட்டில் 15,000 ரன்கள்..! முதல் வீரராக உலக சாதனை படைத்த ஜாஸ் பட்லர்!
டி20 கிரிக்கெட்டில் உலக சாதனை படைத்த ஜாஸ் பட்லர் குறித்து...

ஜாஸ் பட்லர் - படம்: ஏபி
டி20 கிரிக்கெட்டில் இங்கிலாந்தைச் சேர்ந்த வீரர் ஜாஸ் பட்லர் (36 வயது) உலக சாதனை படைத்துள்ளார். முதல் வீரராக 15,000 ரன்களை கடந்து அசத்தியுள்ளார்.
இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் இங்கிலாந்து அணி 2-0 என தொடரை வென்றுள்ளது. கடைசி டி20 நாளை நடைபெற இருக்கிறது.
இந்தத் தொடரில் ஜாஸ் பட்லர் முதல் போட்டியில் பட்லர் 44 பந்துகளில் 80 ரன்களும் இரண்டாவது போட்டியில் 16 பந்துகளில் 30 ரன்களும் எடுத்து அசத்தினார்.
இந்த சிறப்பான பேட்டிங் மூலம் டி20 கிரிக்கெட்டில் ஜாஸ் பட்லர் 15,000 ரன்களைக் கடந்துள்ளார். இரண்டாவது இடத்தில் கைரன் பொல்லார்டு 14,999 ரன்களுடன் இருக்கிறார்.
இந்தப் பட்டியலில் டாப் 5 இடத்தில் எந்த ஒரு இந்தியர்களும் இடம்பெறவில்லை. விராட் கோலி மட்டுமே 6ஆவது இடத்தில் இருக்கிறார்.
டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள்
1. ஜாஸ் பட்லர் - 15,000 ரன்கள் (528 போட்டிகள்)
2. கைரன் பொல்லார்ட் - 14, 999 ரன்கள் (754 போட்டிகள்)
3. அலெக்ஸ் ஹேல்ஸ் - 14, 581 ரன்கள் ( 537 போட்டிகள்)
4. கிறிஸ் கெயில் - 14, 562 ரன்கள் (463 போட்டிகள்)
5. டேவிட் வார்னர் - 14, 284 ரன்கள் (439 போட்டிகள்)
6. விராட் கோலி - 14, 218 ரன்கள் (430 போட்டிகள்)
7. ஜேம்ஸ் வின்ஸ் - 14, 081 ரன்கள் (501 போட்டிகள்)
Jos Buttler becomes the first player to reach 15,000 T20 runs ð¤¯
— England's Barmy Army ð´ó §ó ¢ó ¥ó ®ó §ó ¿ðº (@TheBarmyArmy) September 17, 2026
An incredible achievement for Englandâs greatest ever white-ball player ð pic.twitter.com/f3baodGi7M
Summary
15,000 runs in T20 cricket..! Jos Buttler sets the record as the first player to achieve this feat!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








