தவெக ஆதரவு கட்சிகள் கூட்டம்: காங்கிரஸுக்கு நேரில் அழைப்பு விடுத்த அமைச்சர்கள்!உத்தர பிரதேச வெள்ளம்: 26 மாவட்டங்கள் பாதிப்பு - 17,500 போ் மீட்புமாவட்ட நீதிபதிகளின் ஓய்வு வயது 62: தமிழ்நாடு உள்பட 7 மாநிலங்கள் ஒப்புதல்396 ஆசிரியா்களுக்கு டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது: அமைச்சா் ராஜ்மோகன் இன்று வழங்குகிறாா்நிலக்கரியில் இருந்து வாயுக்களைப் பிரித்தெடுக்கும் திட்டம்: ஒப்பந்தப்புள்ளி கோராத நிறுவனங்கள்ரயில் நிலையங்களின் வருவாய் பட்டியல்: சென்ட்ரலுக்கு 3-ஆவது இடம்!

டி20 கிரிக்கெட்: 20 வயதில் உலக சாதனை படைத்த தென்னாப்பிரிக்க வீரர்!

தென்னாப்பிரிக்க வீரர் லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ் நிகழ்த்திய உலக சாதனை குறித்து...

South Africa's Lhuan-dre Pretorius plays a shot during the first Twenty20 international cricket match between South Africa and West Indies at Boland Park in Paarl on January 27, 2026. (Photo by RODGER BOSCH / AFP)

லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ் - AFP

Published On :5 செப்டம்பர் 2026, 11:41 am IST

தென்னாப்பிரிக்க வீரர் லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் குறைந்த வயதில் சதமடித்த வீரராக உலக சாதனை நிகழ்த்தியுள்ளார்.

முத்தரப்பு டி20 தொடரில் ஜிம்பாப்வே - தென்னாப்பிரிக்கா - நமீபியா அணிகள் விளையாடி வருகின்றன. அதன்படி நேற்றிரவு நமீயா - தென்னாப்பிரிக்க அணிகள் மோதின.

டாஸ் வென்ற நமீபியா பந்துவீச, தென்னாப்பிரிக்கா 20 ஓவர்களில் 228/4 ரன்கள் குவித்தது. இதில் தொடக்க வீரர் லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ் (20 வயது) அதிரடியாக விளையாடி 53 பந்துகளில் 101 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

மற்றுமொரு தொடக்க வீரர் கானர் எஸ்டர்ஹுய்சன் 88 ரன்கள் குவிக்க, டெவால்ட் பிரெவிஸ் 3 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து விளையாடிய நமீபியா 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 211 ரன்கள் குவித்தது.

இருப்பினும் 11 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற தென்னாப்பிரிக்கா இறுதிப் போட்டியில் ஜிம்பாப்வே உடன் மோதவிருக்கிறது.

இந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்க வீரர் லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ் சதமடித்தது உலக சாதனையாக மாறியிருக்கிறது. முழு உறுப்பினர்கள் நாட்டில் குறைந்த வயதில் சதமடித்தவராக சாதனை படைத்துள்ளார்.

இந்தப் பட்டியலில் இந்த வீரர் ஜெய்ஸ்வால் மூன்றாமிடத்தில் இருக்கிறார். வைபவ் சூர்யவன்ஷி விரைவில் இதையெல்லாம் முறியடிப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Summary

Lhuan-dre Pretorius becomes the youngest batter from a Full Member nation to smash a T20I century!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.