நொய்டாவை வீழ்த்தி இறுதிக்கு முன்னேறியது மீரட்..! லக்னௌவை பழிவாங்குமா?
யுபி டி20 லீக்கின் குவாலிஃபயர் 2 ஆட்டத்தில் வென்ற மீரட் மாவேரிக்ஸ் அணி குறித்து...

மீரட் மாவேரிக்ஸ் அணியினர். - படம்: இன்ஸ்டா / மீரட் மாவேரிக்ஸ்
யுபி டி20 லீக்கின் குவாலிஃபயர் 2 ஆட்டத்தில் மீரட் மாவேரிக்ஸ் அணி நொய்டா சூப்பர் கிங்ஸ் அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
இந்த வெற்றியுடன் மீரட் மாவேரிக்ஸ் அணி குவாலிஃபயர் 1 ஆட்டத்தில் தன்னை வென்ற லக்னௌ ஃபால்கோன்ஸ் உடன் இறுதிப் போட்டியில் மோதவிருக்கிறது.
யுபி டி20 லீக்கின் குவாலிஃபயர் 2 ஆட்டத்தில் மீரட் மாவேரிக்ஸ் - நொய்டா சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற மீரட் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த நொய்டா சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 134/8 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக சௌர்யா சிங் 47, மாதவ் கௌசிக் 36 ரன்கள் எடுக்க, கேப்டன் பிரசாந்த வீர் 18 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
மீரட் சார்பாக பந்துவீச்சில் ஜீசன் ஹன்சாரி, யஷ் கர்க் தலா 3 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்கள். அடுத்து பேட்டிங் செய்த இந்த அணி 18 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்து வென்றது.
இந்த அணியில் அதிகபட்சமாக யஷ் கர்க் 56*, கேப்டன் ரிங்கு சிங் 37* ரன்கள் எடுத்து, கடைசி வரை ஆட்டமிழக்காமல் போட்டியை வென்று கொடுத்தார்கள். இறுதிப் போட்டியில் லக்னௌ அணியை பழி வாங்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Summary
UPT20 Meerut Mavericks going to final against Lucknow Falcons
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






