இன்று கோவை, திருவள்ளூா் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கை ராமேசுவரம் - எழும்பூருக்கு இன்று சிறப்பு விரைவு ரயில் தாம்பரம் - விழுப்புரம் மெமு ரயில் நாளை பகுதி ரத்து லாஸ் ஏஞ்சலீஸ் மேயா் தோ்தல்: கேரள வம்சாவளி பெண் முன்னிலை பிரதமா் மோடி டிசம்பரில் கனடா பயணம்

டிஎன்பிஎல் குவாலிஃபயர் 2: கோவை கிங்ஸ் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு!

சென்னையில் நடைபெறும் டிஎன்பிஎல் குவாலிஃபயர் 2 போட்டி குறித்து...

Captain of the Kovai Kings team.

கோவை கிங்ஸ் அணியின் கேப்டன். - படம்: யூடியூப் / டிஎன்பிஎல்

Updated On :

சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் டிஎன்பிஎல் குவாலிஃபயர் 2 போட்டியில் கோவை கிங்ஸ் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

டிஎன்பிஎல் சீசன் 10 போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. பிளே ஆஃப் போட்டிகள் இன்றுடன் முடிவடைய இருக்கின்றன. இதில் வெல்லும் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறவிருக்கிறது.

குவாலிஃபயர் 2 போட்டியில் கோவை கிங்ஸ் அணி - திருச்சி கிராண்ட் சோழாஸ் அணி மோதுகின்றன. டாஸ் வென்ற கோவை அணியின் கேப்டன் ஷாருக்கான் பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.

கோவை அணி: சுரேஷ் லோகேஷ்வர், எஸ். ராதாகிருஷ்ணன், பாலசுப்ரமணியம் சச்சின், ஷாருக் கான், ஆர்எஸ். அம்ப்ரிஷ், மாதவ பிரசாத், மணிமாறன் சித்தார்த், ஜி. கிஷோர், ஜாதவேத் சுப்ரமணியன், கே. தீபன் லிங்கேஷ்

திருச்சி அணி: ஜெயராமன் சுரேஷ் குமார், கே. ராஜ்குமார், எஸ். ஷியாம் சுந்தர், சஞ்சய் யாதவ், ஆர் ராஜ்குமார், ஜெகதீசன் கௌசிக், என். செல்வ குமரன், ஆண்டனி தாஸ், வி. அதிசயராஜ் டேவிட்சன், பி. சரவண குமார், கே. ஈஸ்வரன்

இந்தப் போட்டியில் வெல்லும் அணி மதுரை பாந்தர்ஸ் உடன் இறுதிப் போட்டியில் விளையாடுவார்கள். ஒருவேளை மழையினால் இந்த ஆட்டம் ரத்தானால் திருச்சி அணி புள்ளிப் பட்டியலின் அடிப்படையில் முன்னேறும் என்பது கவனிக்கத்தக்கது.

Summary

TNPL Qualifier 2: Kovai Kings win toss, elect to bat!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.