
வங்கதேச அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ விலகியுள்ளார்.
அனைத்து வடிவிலான போட்டிகளுக்குமான வங்கதேச அணியின் கேப்டனாக நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ செயல்பட்டு வந்தார். இந்த நிலையில், டி20 போட்டிகளுக்கான கேப்டன் பொறுப்பிலிருந்து அவர் விலகியுள்ளார். இதனை வங்கதேச கிரிக்கெட் வாரியம் உறுதி செய்துள்ளது.
இது தொடர்பாக வங்கதேச கிரிக்கெட் வாரியத் தலைவர் ஃபரூக் அகமது கூறியதாவது: வங்கதேச அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவதாக நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ தெரிவித்துள்ளார். அவரது இந்த முடிவை நாங்கள் ஏற்றுக் கொண்டுள்ளோம். அடுத்து சில மாதங்களுக்கு வங்கதேச அணி எந்த ஒரு டி20 தொடரிலும் விளையாடாததால் புதிய கேப்டன் குறித்து தற்போது எந்த ஒரு முடிவும் எடுக்கப்படவில்லை. ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கான வங்கதேச அணியின் கேப்டனாக நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ தொடர்ந்து செயல்படுவார் என்றார்.
அனைத்து வடிவிலான போட்டிகளுக்கும் நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ கேப்டனாக இருப்பது தொடர்பாக விமர்சனங்கள் எழுந்த நிலையில், தற்போது அவர் டி20 போட்டிகளுக்கான கேப்டன் பொறுப்பிலிருந்து விலகியுள்ளார்.
நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ வங்கதேச டி20 அணியின் கேப்டனாக கடந்த ஆண்டு பிப்ரவரியில் பொறுப்பேற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.