இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரின் டெஸ்ட் போட்டி எதிர்காலம் குறித்து இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் பேசியுள்ளார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடர் இன்றுடன் நிறைவடைந்தது. சிட்னியில் நடைபெற்ற கடைசி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது. இதன் மூலம், ஆஸ்திரேலிய அணி 10 ஆண்டுகளுக்குப் பிறகு, பார்டர் - கவாஸ்கர் கோப்பையை வென்றுள்ளது.
இந்த பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடர் முழுவதுமே இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சரியாக செயல்படவில்லை. குறிப்பாக, இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியின் ஃபார்ம் அணிக்கு கவலையளிக்கும் விதமாகவே அமைந்தது. இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மீதான விமர்சனங்கள் அதிகரித்தன. குறிப்பாக, ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியின் மீதான விமர்சனங்கள் அதிகரித்தன.
ரோஹித் சர்மா, விராட் கோலியின் எதிர்காலம் என்ன?
பார்டர் - கவாஸ்கர் தொடரை இழந்த நிலையில், ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவருக்கும் இந்திய அணிக்காக சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற எண்ணம் இருப்பதாகவும், இந்திய அணியின் நலனைக் கருத்தில் கொண்டு டெஸ்ட் போட்டிகளில் அவர்களது எதிர்காலம் குறித்து முடிவெடுக்கப்படும் எனவும் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

விராட் கோலி - படம் | AP
இது தொடர்பாக அவர் பேசியதாவது: ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் மிகவும் வலிமையானவர்கள். அவர்களுக்கு இந்திய அணிக்காக சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற வேட்கை இருக்கிறது. இந்திய அணியின் நலனைக் கருத்தில் கொண்டு, அவர்களது முடிவுகளை எதிர்காலத்தில் எடுப்பார்கள். வீரர்கள் மகிழ்ச்சியாக இருப்பதை உறுதி செய்ய, நான் அனைவரிடமும் நேர்மையாகவும், நியாயமாகவும் இருக்க வேண்டியிருக்கிறது என்றார்.
இதையும் படிக்க: பார்டர் - கவாஸ்கர் தொடரை வென்றது ஆஸ்திரேலியா!
பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரை இழந்ததன் மூலம், இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெறுவதற்கான வாய்ப்பினை இழந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஐபிஎல்: விராட் கோலியின் நீண்ட கால சாதனையை முறியடித்த ரோஹித் சர்மா!

இந்த ஐபிஎல் சீசனில் ரோஹித் சர்மா அதிரடியில் மிரட்டுவார்: அஸ்வின்

மற்றவர்கள் நினைப்பது முக்கியமல்ல, அதிரடியாக விளையாடுங்கள்; அபிஷேக் சர்மாவுக்கு கம்பீர் ஆதரவு!

13 ஆண்டுகள் காத்திருப்பை நிறைவேற்றிய ‘ரோ - கோ’ மேஜிக்! 2024 டி20 உலகக் கோப்பை ரீவைண்ட்!!
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


