இந்தியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் டெஸ்ட் போட்டிகளில் 10 ஆயிரம் ரன்கள் அடிக்கும் வாய்ப்பினை ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் ஒரு ரன்னில் தவறவிட்டார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது. சிட்னியில் நடைபெற்ற கடைசிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி இந்தியாவை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரையும் 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
சிட்னியில் நடைபெற்ற கடைசி டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் பிரசித் கிருஷ்ணா பந்துவீச்சில் ஸ்டீவ் ஸ்மித் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் ஸ்டீவ் ஸ்மித் டெஸ்ட் கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்களைக் கடந்து சாதனை படைப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஒரு ரன்னில் அவர் அந்த சாதனையை தவறவிட்டார்.
மனம் திறந்த ஸ்டீவ் ஸ்மித்
ஒரு ரன்னில் டெஸ்ட் போட்டிகளில் 10 ஆயிரம் ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையை தவறவிட்ட ஸ்டீவ் ஸ்மித், கடைசிப் போட்டியில் விளையாடிய சிட்னி ஆடுகளம் போன்ற ஒரு கடினமான ஆடுகளத்தை ஒருபோதும் பார்த்ததில்லை எனத் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: நான் ஆட்டமிழந்த பந்து மிகவும் கடினமானதாக இருந்தது. அப்படியொரு பந்துவீச்சை எதிர்பார்க்கவில்லை. டெஸ்ட் போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களை எடுக்க வேண்டும் என்று விளையாடவில்லை. ஆனால், எங்களுக்கு எதிர்பார்த்த முடிவு கிடைத்துவிட்டது. சிட்னி ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு மிகவும் கடினமானதாக இருந்தது. இதற்கு முன்னதாக சிட்னியில் இப்படியொரு ஆடுகளத்தில் நான் விளையாடியதே இல்லை.
இதையும் படிக்க: ஆஸ்திரேலியாவில் நிறைய கற்றுக் கொண்டேன்: யஷஸ்வி ஜெய்ஸ்வால்
இந்த தொடர் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்திய அணி நம்பமுடியாத அளவுக்கு மிகவும் சிறந்த அணி. இந்திய அணி எங்களுக்கு மிகவும் சவாலாக இருந்தனர். அதிலும் குறிப்பாக, ஜஸ்பிரித் பும்ராவை எதிர்கொள்வது மிகுந்த சவாலானதாக இருந்தது. இருப்பினும், இறுதியில் தொடரைக் கைப்பற்றியது மகிழ்ச்சியளிக்கிறது என்றார்.
இதுவரை ஆஸ்திரேலிய அணிக்காக 114 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஸ்டீவ் ஸ்மித், 9,999 ரன்கள் குவித்துள்ளார். அதில் 4 இரட்டை சதங்கள், 34 சதங்கள் மற்றும் 41 அரைசதங்கள் அடங்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முதல் டெஸ்ட்: பாகிஸ்தானை 104 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வங்கதேசம் அபார வெற்றி!
வங்கதேசம் 179 ரன்கள் முன்னிலை!

ஐபிஎல், பிபிஎல், பிஎஸ்எல் டி20 தொடர்களில் சதம் அடித்த ஒரே வீரராக ஸ்டீவ் ஸ்மித் சாதனை!

அபிஷேக் சர்மா எளிதாக சதங்கள் விளாசுகிறார்: புஜாரா
விடியோக்கள்

#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு

