டெஸ்ட் கிரிக்கெட்டில் ஸ்டீவ் வாக் சாதனையை முறியடித்த ஸ்டீவ் ஸ்மித்!
ஆஸ்திரேலியாவுக்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் ஸ்டீவ் ஸ்மித் நிகழ்த்திய சாதனை குறித்து...

ஸ்டீவ் ஸ்மித் (கோப்புப் படம்) - AFP
ஆஸ்திரேலியாவுக்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் முன்னாள் வீரர் ஸ்டீவ் வாக்கை முந்தி ஸ்டீவ் ஸ்மித் புதிய சாதனை படைத்துள்ளார்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் டர்பனில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலியா டாஸ் வென்று பேட்டிங் செய்து வருகிறது. இதில் ஆஸி. அணி 26 ஓவர்களில் 84/3 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தப் போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் 25* ரன்களுடன் விளையாடி வருகிறார். இத்துடன் ஆஸி. அணிக்காக டெஸ்ட்டில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் ஸ்டீவ் வாக்கை முந்தி மூன்றாமிடம் பிடித்து அசத்தியுள்ளார்.
இந்தப் போட்டிக்கு முன்பாக ஸ்மித் 10, 904 ரன்களுடன் நான்காமிடத்தில் இருந்தார். தற்போது மூன்றாமிடத்துக்கு முன்னேறியுள்ளார்.
ஆஸி. அணிக்காக டெஸ்ட்டில் அதிக ரன்கள்
1. ரிக்கி பாண்டிங் - 13, 378 ரன்கள்
2. ஆலன் பார்டர் - 11, 174 ரன்கள்
3. ஸ்டீவ் ஸ்மித் - 10, 929* ரன்கள்
4. ஸ்டீவ் வாக் - 10, 927 ரன்கள்
5. டேவிட் வார்னர் - 8, 786 ரன்கள்
Summary
Steve Smith breaks Steve Waugh's record in Test cricket for australia!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


