புற்றுநோய் சிகிச்சை... 10 ஆண்டுகளுக்குப் பிறகு அணியில் இடம்பிடித்த நிக் மேடின்சன்!

ஆஸ்திரேலிய வீரர் நிக் மேடின்சன் 10 ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் அணியில் இடம்பிடித்தது குறித்து...

Australia's Nic Maddinson walks back to the pavilion after his dismissal on day one of the first Test match between South Africa and Australia at the Kingsmead stadium in Durban on October 9, 2026. (Photo by Marco Longari / AFP)

ஆட்டமிழந்து வெளியேறிய நிக் மேடின்சன் - AFP

Published On :

ஆஸ்திரேலிய வீரர் நிக் மேடின்சன் 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ளது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

18 மாதங்களுக்கு முன்பாக இவர் கீமோதெரபி சிகிச்சையில் இருந்தார். விதைப்பை புற்றுநோயில் இருந்து மீண்டு வந்தது டெஸ்ட் அணியில் இடம்பெற்றுள்ளார்.

டர்பன் டெஸ்ட்டில் நிக் மேடின்சன் பிளேயிங் லெவனில் இடம் பிடித்தார். முன்னதாக, 2016 டெஸ்ட் தொடரில் விளையாடியிருந்தார்.

அப்போது சுமாரான பேட்டிங்கை வெளிப்படுத்திய இவரை மீண்டும் அணியில் எடுத்தது சர்ச்சையானது. இது குறித்து 34 வய்தாகும் நிக் மேடின்சன் கூறியிருப்பதாவது:

ஜியார்ஜ் பெய்லி (தேர்வுக்குழுத் தலைவர்) என்னை அழைத்த போது இந்தியா ஏ அணிக்கு எதிரான தொடருக்காக இருக்குமென நினைத்தேன். அல்லது என்னிடம் யாராவது இளம் வீரர்கள் இருக்கிறார்கள் என கேட்பதற்காக அழைத்தார் என்று இருந்தேன். ஏனெனில் என்ன நடக்கிறதென எனக்குத் தெரியவில்லை.

அவரிடம் பேசினேன். என்றாவது டெஸ்ட் அணியில் இடம்பிடிப்பேன் எனத் தெரியும். ஆனால், இப்போதே அது நடந்தது சற்று வியப்புதான்.

விளையாடுவதற்கு நான் வருத்தமடையவில்லை. நியூ சௌத் வேல்ஸ் அணிக்காக சிவப்பு பந்து போட்டிகளில் அதிகமாக விளையாடி இருக்கிறேன். சமீபத்தில் நான்கு நாள் போட்டிகளில் அதிகமாக விளையாடியதில்லை என்பதும் உண்மைதான். இருப்பினும் எனது உடல்தகுதி குறித்து எனக்குக் கவலையில்லை. களத்தில் இறங்கியதும் அதெல்லாம் தானாக தகவமைத்துக்கொள்ளும் என்றார்.

முதல் இன்னிங்ஸில் 33 பந்துகளில் ரன் ஏதும் அடிக்காமல் நிக் மேடின்சன் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். இவரை தென்னாப்பிரிக்க வீரர் மார்கோ யான்சென் போல்ட் ஆக்கினார்.

தற்போது, ஸ்மித் - லபுஷேன் விளையாடி வருகிறார்கள். ஆஸி. அணி 12 ஓவர்களில் 28 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

Summary

Nic Maddinson's second second chance 18 months ago, he was undergoing chemotherapy for testicular cancer

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.