இந்தியாவுக்கு எதிரான டி20 தொடர்..! நியூசிலாந்து அணியில் இரண்டு வீரர்கள் விலகல்!

நியூசிலாந்து அணியில் காயம் காரணமாக விலகிய வீரர்கள் குறித்து...

Mark Chapman, Zakary Foulkes

மார்க் சாப்மன், ஜாக் ஃபோக்ஸ் - படம்: எக்ஸ் / பிளாக் கேப்ஸ்

Published On :

இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் விளையாட இருந்த நியூசிலாந்து அணியின் இரண்டு வீரர்கள் விலகியதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப் பயணம் செய்து 5 டி20, 5 ஒருநாள், 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறது. முதல் டி20 வரும் அக்.22ஆம் தேதி தொடங்கவிருக்கிறது.

இந்த 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இருந்து நியூசிலாந்து அணியின் மார்க் சாப்மன், ஜாக் ஃபோக்ஸ் காயம் காரணமாக விலகியுள்ளார்கள்.

32 வயதான ஆல்ரவுண்டர் சாப்மன் ஐரோப்பிய டி20 லீக்கில் இடது தொடையில் ஏற்பட்ட தசைக்கிழிவில் இருந்து முழுமையாக குணம் ஆகவில்லை என்பதாலும், வேகப் பந்துவீச்சாளர் போக்ஸ் பயிற்சியின்போது இடுப்பின் வலது பக்கத்தில் உள்ள தசையில் காயம் ஏற்பட்டுள்ளதால் அவரும் விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சாப்மன் 113 டி20 போட்டிகளில் 2,074 ரன்களும் 4 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார். ஃபோக்ஸ் 22 டி20 போட்டிகளில் 22 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

மார்க் சாப்மன் ஒருநாள் தொடரில் இடம்பெறுவார் என்றும் ஃபோக்ஸ் எப்போது குணமடைவார் என்பது உறுதியாகவில்லை என்றும் நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

இந்த இரண்டு வீரர்களுக்குப் பதிலாக ஆல்ரவுண்டர் ஜோஷ் கிளார்சன், வேகப் பந்துவீச்சாளர் பிளெயிர் டிக்னர் இணைந்துள்ளார்கள்.

நியூசிலாந்து அணி: மிட்செல் சான்ட்னர் (கேப்டன்), ஃபின் ஆலன், மைக்கேல் பிரேஸ்வெல், ஜோஷ் கிளார்க்சன், டெவோன் கான்வே, ஜேக்கப் டஃபி, லாக்கி ஃபெர்குசன், மாட் ஹென்றி, பெவோன் ஜேக்கப்ஸ், கைல் ஜேமிசன், ஆடம் மில்னே, டேரில் மிட்செல், கிளென் பிலிப்ஸ், டிம் சீஃபர்ட், நாதன் ஸ்மித், பிளேயர் டிக்னர்.

Summary

New Zealand's Chapman, Foulkes ruled out of T20I series against India

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER