இந்திய தொடர்: 5 பந்துகளில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியவருக்கு நியூசிலாந்து அணியில் இடம்!
இந்தியாவுக்கு எதிரான 4, 5-வது ஒருநாள் போட்டிகளுக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளதைப் பற்றி...
பிரட் ராண்டெல்.
இந்தியாவுக்கு எதிரான 4, 5-வது ஒருநாள் போட்டிகளுக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் பிரட் ராண்டெல் முதல் முறையாக இடம்பிடித்துள்ளார்.
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 டி20, 5 ஒருநாள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
இந்தத் தொடரில் டி20 போட்டித் தொடரை இந்திய அணி வென்ற நிலையில், இவ்விரு அணிகளும் மோதிய முதலிரண்டு ஒருநாள் போட்டி தொடரில் இந்திய அணி வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. மூன்றாவது ஒருநாள் போட்டி மழையால் பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில், இவ்விரு அணிகளும் மோதும் நான்காவது ஒருநாள் போட்டி நாளை (நவ. 12) மவுண்ட் மவுங்கானுவில் நடைபெறவிருக்கிறது. கடைசி இரண்டு போட்டிகளுக்கான அணியை நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
நியூசிலாந்து அணியில் 31 வயதான பிரட் ராண்டெலுக்கு முதல்முறையாக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தேசிய அணியில் வாய்ப்பை பெற்றுள்ள பிரட், நியூசிலாந்து ஏ அணிக்காக 5 போட்டிகள் உள்பட 145 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
முதல் தர கிரிக்கெட்டின் 254 ஆண்டுகால வரலாற்றில் 5 பந்துகளில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் என்ற உலக சாதனையைப் படைத்து புகழ்பெற்றவர்.
இவர் கடந்த மார்ச் மாதம் பிளங்கெட் ஷீல்ட் தொடரில் சென்ட்ரல் டிஸ்ட்ரிக்ட்ஸ் அணிக்காக விளையாடியபோது, நார்தர்ன் டிஸ்ட்ரிக்ட்ஸ் அணிக்கு எதிராக 5 பந்துகளில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி (7/25) உலக சாதனை படைத்தார். டெர்பிஷயருக்காக 4 போட்டிகளில் 20 விக்கெட்டுகள் வீழ்த்திய இவர் இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
4-ஆவது போட்டிக்கான நியூசிலாந்து அணி
மிட்செல் சான்ட்னர் (கேப்டன்), ஃபின் ஆலன், மைக்கேல் பிரேஸ்வெல், கிறிஸ்டியன் கிளார்க், ஜேக்கப் டஃபி, மாட் ஃபிஷர், டீன் ஃபாக்ஸ்கிராஃப்ட், மிட்ச் ஹே (விக்கெட் கீப்பர்), மேட் ஹென்றி, கைல் ஜேமிசன், நிக் கெல்லி, பிரட் ராண்டெல், டிம் செய்ஃபர்ட் (விக்கெட் கீப்பர்), வில் யங்.
5-ஆவது போட்டிக்கான நியூசிலாந்து அணி
மிட்செல் சான்ட்னர் (கேப்டன்), ஃபின் ஆலன், மைக்கேல் பிரேஸ்வெல், கிறிஸ்டியன் கிளார்க், ஜோஷ் கிளார்க்சன், ஜேக்கப் டஃபி, மாட் ஃபிஷர், டீன் ஃபாக்ஸ்கிராஃப்ட், மிட்ச் ஹே (விக்கெட் கீப்பர்), நிக் கெல்லி, பிரட் ராண்டெல், டிம் செய்ஃபர்ட் (விக்கெட் கீப்பர்), பிளேயர் டிக்னர், வில் யங்.
Summary
New Zealand on Thursday added unheralded pacer Brett Randell to their squad for the fourth and fifth ODIs against India here.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

