முன்னாள் இந்திய வீரர் இந்தியாவின் தோல்விக்கு காரணம் அவர்களது தற்காப்பு மனநிலையே எனக் கூறியுள்ளார்.
பார்டர் - கவாஸ்கர் தொடரில் இந்திய அணி 1-3 என தோல்வியுற்றது.
இந்தத் தோல்விக்கு இந்திய அணியின் பேட்டிங்கில் இருக்கும் பிரச்னையே பலரும் காரணமாக கூறிவருகிறார்கள்.
விராட் கோலி, ரோஹித் சர்மா மோசமாக விளையாடியது குறிப்பிடத்தக்கது.
பந்துவீச்சில் போதிய அளவுக்கு ஆழமில்லை என முன்னாள் வீரர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இந்தியாவின் தோல்வி குறித்து முன்னாள் கிரிக்கெட்டர் தீப் தாஸ் குப்தா கூறியதாவது:
நீங்கள் அணியை தேர்வு செய்யும்போதே அது உங்கள் மனநிலையை பிரதிபலிக்கும். அதை நான் முதல் போட்டியிலேயே உணர்ந்தேன். 8ஆவது ஆள் வரை பேட்டிங்கை கொண்டு சென்றதால் அவரங்களது தற்காப்பு மனநிலை நன்றாக தெரிந்தது.
வாஷிங்டன் சுந்தர் குறைவாகவே பந்துவீசியதால் அவரை பேட்டராகவே அணி நிர்வாகம் எடுத்துள்ளது. இது பந்துவீச்சை சமரசம்செய்து பேட்டிங்குக்கு முட்டுக்கொடுக்க இப்படி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்த தற்காப்பு மனநிலைதான் இந்தியாவின் தோல்விக்கு காரணம். நேர்மறையான எண்ணம் தெளிவாக முடிவெடுக்க வைக்கும். மேலும், இயற்கையாகவே அனைத்தும் பொருந்திவரும் என்றார்.