தென்னாப்பிரிக்க கேப்டன் தெம்பா பவுமா 74 ஆண்டுகளுக்குப் பின் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை படைப்பாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதல்முறையாக உலக டெஸ்ட் சாம்பியன்-ஷிப் இறுதிப்போட்டிக்குத் தகுதிபெற்றுள்ளது.
இந்திய அணி தகுதிபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் தொடரை 1-3 என்ற கணக்கில் இழந்ததால், ஆஸ்திரேலியா நேரடியாக இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.
இதனால், ஜூன் மாதம் 11 ஆம் தேதி இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கும் இறுதிப்போட்டியில் இவ்விரு அணிகளும் விளையாடவிருக்கின்றன.
தெம்பா பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்க அணி கடைசியாக விளையாடிய 9 போட்டிகளில் 8-ல் வென்றும் ஒரு போட்டி சமனிலும் முடிந்ததால் தோல்வியின்றி வீறுநடை போட்டுக்கொண்டிருக்கிறது. மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக சமனில் முடிந்த போட்டி மழையால் முடிவுக்கு வந்தது.
புதிய வரலாறு படைப்பாரா தெம்பா பவுமா?
1921 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணியின் கேப்டன் பெர்சி சான்மேன் தொடர்ச்சியாக 9 போட்டிகளில் வென்றதே இதுவரை சாதனையாக தொடர்கிறது.
இந்தநிலையில், அவருக்கு அடுத்தபடியாக 1921 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவின் வார்விக் ஆர்ஸ்ட்ராங் மற்றும் லிண்ட்சே ஹாசெட்(1951) ஆகியோர் 9 போட்டிகளில் 8-ல் வெற்றி பெற்றிருந்த சாதனையை பவுமா சமன் செய்துள்ளார்.
ஒருவேளை ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றிபெற்று அதன்பின்னர், அடுத்த போட்டியிலும் வெற்றிபெறும் பட்சத்தில் அதிவேகமாக 10 போட்டிகளில் வென்ற கேப்டன் என்ற புதிய வரலாற்றையும் 74 ஆண்டுகளுக்குப் பின்னர் படைக்க முடியும்.
பவுமாவைத் தொடர்ந்து பிரையன் க்ளோஸ் (இங்கிலாந்து), சார்லஸ் ஃப்ரை (இங்கிலாந்து), அஜிங்க்யா ரஹானே (இந்தியா) ஆகியோரும் தோல்வியைச் சந்திக்காத கேப்டன்களாக உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஏழு முதல்வர்களுடன் நடித்த ஒரே நடிகை!

55 ஆண்டுகளுக்குப் பின் போட்டியிட்டு வாசுதேவநல்லூரில் வென்ற திமுக

உச்சத்தில் மாருதி சுஸுகி பங்குகள்!

7 ஆண்டுகளுக்குப் பின்.. இந்தியாவில் நங்கூரமிட்ட ஈரானிய எண்ணெய் கப்பல்கள்
விடியோக்கள்

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை

Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு

