ரிஷப் பந்த், அஸ்வின்.
ரிஷப் பந்த், அஸ்வின். கோப்புப் படங்கள்.

உலகத்திலேயே ரிஷப் பந்த் ஒரு சிறந்த டிஃபென்டர்..! அஸ்வின் புகழாரம்!

இந்திய அதிரடி வீரர் ரிஷப் பந்தினை அஸ்வின் புகழ்ந்து பேசியுள்ளார்.
Published on

இந்தியாவின் முன்னாள் ஆல்-ரவுண்டர் ரவிச்சந்திரன் அஸ்வின் ரிஷப் பந்த்திடம் நல்ல டிஃபென்ஸ் (தடுத்து ஆடும்) செய்யும் திறமை இருக்கிறதெனப் புகழ்ந்து பேசியுள்ளார்.

பார்டர் - கவாஸ்கர் தொடரில் ரிஷப் பந்த் பலமுறை 100க்கும் மேற்பட்ட பந்துகள் விளையாடி திடீரென அதிரடியாக விளையாடி ஆட்டமிழந்தார்.

மெல்போர்னில் 30 (104 பந்துகளில்), சிட்னியில் முதல் இன்னிங்ஸில் 40 (98 பந்துகளில்) எடுத்தார். 2ஆம் இன்னிங்ஸில் 33 பந்துகளில் 61 ரன்கள் அடித்து அசத்தினார்.

கவாஸ்கர் ஒரு போட்டியில் ரிஷப் பந்தினை முட்டாள் எனக் கூறினார். இந்த நிலையில் ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியதாவது:

சிறந்த டிஃபென்டர் (தடுப்பாட்டக்காரர்)

டிஃபென்ஸ் விளையாடி ரிஷப் பந்த் ஆட்டமிழந்தது மிகவும் அரிதானது. டெஸ்ட்டில் பேட்டர்களுக்கு டிஃபென்ஸ் கடினமாக இருக்கும்போது ரிஷப் பந்த் அதை மிகச் சாதாரணமாக செய்வார். நான் ரிஷப் பந்துக்கு வலைப் பயிற்சியில் அதிகம் முறை பந்து வீசியுள்ளேன். அவர் ஆட்டமிழந்ததே இல்லை, பேட்டில் எட்ஜ் வாங்கியதுமில்லை,எல்பிடபிள்யூ ஆனதுமில்லை.

உலகத்திலேயே மிகச் சிறந்த டிஃபென்ஸை வைத்துள்ளார் ரிஷப் பந்த். நான் இதை அவரிடம் சொல்ல விரும்புகிறேன். ரிஷப் பந்த் அதிகமாக ஷாட்டுகள் அடிக்கிறார் என்பது அவரிடம் சொல்ல வேண்டியது. டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் போராட வேண்டும்.

5 போட்டிகளில் 225 ரன்கள் எடுத்தார். ஒரு அரைசதம் அடித்தார். பிஜிடி தொடரில் இந்தியாவில் 6ஆவதாக அதிகமாக ரன்கள் அடித்தவாராக இருந்தார்.

ரிஷப் பந்த் அதிரடியாக ஆடித்தான் பிஜிடி தொடரில் பெரும்பால முறையும் ஆட்டமிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com