தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

மும்பை ரஞ்சி அணியுடன் ரோஹித் சர்மா பயிற்சி!

ரஞ்சி கோப்பை தொடங்குவதற்கு தயாராகி வரும் நிலையில், இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பயிற்சியில் ஈடுபட்டார்.

News image

பயிற்சியில் ரோஹித் சர்மா.

Updated On :14 ஜனவரி 2025, 8:41 am

DIN

ரஞ்சி கோப்பை தொடங்குவதற்கு தயாராகி வரும் நிலையில், இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா மும்பை அணியுடன் பயிற்சியில் ஈடுபட்டார்.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதிய பார்டர் - கவாஸ்கர் தொடரில் சரியாக சோபிக்காத ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகினர். 6 இன்னிங்ஸ்களில் விளையாடி வெறும் 31 ரன்கள் மட்டுமே எடுத்தார் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா.

இதனால், இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர், இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள், முன்னணி வீரர்கள் என்றில்லாமல், அனைவரும் உள்ளூர்ப் போட்டிகளிலும் விளையாட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.

சிவப்பு-பந்து கிரிக்கெட் வீரராக தனது எதிர்காலம் கேள்விக்குறி கொண்டிருக்கும் நிலையில், ரோஹித் சர்மா பிசிசிஐயின் மறுஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்டார். அவருடன் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் பிசிசிஐயின் புதிய செயலாளர் தேவஜித் சாய்கியா ஆகியோர் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

இதனால், மும்பையில் ரஞ்சி டிராபியின் இரண்டாம் கட்டப் பயிற்சிக்கு முன்னதாக மும்பை அணியுடன் ரோஹித் சர்மா இணைந்து வான்கடே மைதானத்தில் இரண்டு மணிநேர பயிற்சியில் ஈடுபட்டார்.

ஜனவரி 23 ஆம் தேதி ரஞ்சி டிராபி மீண்டும் தொடங்குகிறது. மும்பை அணிக்காக 2015 ஆம் ஆண்டில் உத்தரபிரதேச அணிக்கு எதிராக போட்டியில் விளையாடியிருந்தார். இதனால், மும்பையின் அடுத்த போட்டியில் ரோஹித் விளையாடுவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.