நவ. 1-க்குள் கடைகளுக்கு தமிழில் பெயர்ப் பலகை: உயர்நீதிமன்றம் உத்தரவுமீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு: உள்ளூர் விடுமுறை குறித்து விரைவில் அறிவிப்பு - அமைச்சர் தகவல் நேபாள வெள்ளம்: கயிற்றுப் பாலம் கட்டும் ராணுவம்! மீட்புப் பணியில் 20 ஹெலிகாப்டர்கள்! லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை பழிவாங்கும் நடவடிக்கைதான்: கே.என். நேரு காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை!எதிர்திசையில் வாகனம் ஓட்டுபவரா? திறந்தது மூன்றாம் கண்! டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்துக்குக் காரணம் திமுக - அதிமுகதான்: அமைச்சர் விக்னேஷ் பேச்சு

ரஞ்சி கோப்பையில் விராட் கோலி விளையாடுகிறாரா?

இந்திய அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான விராட் கோலி ரஞ்சி கோப்பை போட்டியில் விளையாடுகிறாரா என்பது தொடர்பாக...

விராட் கோலி (கோப்புப் படம்)

Published On :17 ஜனவரி 2025, 5:40 pm IST

இந்திய அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான விராட் கோலி ரஞ்சி கோப்பையில் தில்லி அணியில் இடம்பெற்றுள்ளார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடர் அண்மையில் நிறைவடைந்தது. இந்தத் தொடரில் இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். குறிப்பாக, ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் சிறப்பாக செயல்படத் தவறினர்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் பலரும் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியை கடுமையாக விமர்சித்தனர். ஃபார்மில் இல்லாத வீரர்கள் உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

ரஞ்சி கோப்பையில் விளையாடுகிறாரா?

ரஞ்சி கோப்பையில் சௌராஷ்டிரத்துக்கு எதிரான போட்டியில் தில்லி அணி விளையாடவுள்ளது. இந்தப் போட்டிக்கான 22 பேர் கொண்ட உத்தேச அணியை தில்லி அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதில் நட்சத்திர வீரரான விராட் கோலியின் பெயரும் இடம்பெற்றுள்ளது.

இதன் மூலம், ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் விராட் கோலி விளையாடுவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இருப்பினும், ரஞ்சி கோப்பையில் விராட் கோலி விளையாடுகிறாரா? இல்லையா? என்பது இன்னும் உறுதியாகத் தெரியவில்லை.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிட்னியில் நடைபெற்ற கடைசி டெஸ்ட் போட்டியின்போது, விராட் கோலிக்கு கழுத்துப் பகுதியில் வலி ஏற்பட்டதாகவும், அதற்கான சிகிச்சையில் அவர் இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், ரஞ்சி கோப்பையில் விளையாடுவது சந்தேகம் என விராட் கோலி தரப்பிலிருந்து தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

விராட் கோலி கடைசியாக கடந்த 2012 ஆம் ஆண்டு உத்தர பிரதேசத்துக்கு எதிரான ரஞ்சி போட்டியில் விளையாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.