2027 ஜனவரி 10-இல் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு!9 மணி நேர தொடர் போராட்டம்... தில்லியில் ராகுல், பிரியங்கா கைது!இடைத்தேர்தல்: மதுராந்தகத்தில் 85.97%, தாராபுரத்தில் 80.31% வாக்குகள் பதிவுமேற்கு வங்க இடைத்தேர்தல்: நந்திகிராம் - 80.69%, ரெஜிநகர் - 79.90% வாக்குப் பதிவு!ஆரம்பக் கட்டணம் ரூ. 14 லட்சம்! தமிழ்நாட்டில் அயல்நாட்டு பல்கலை.க்கு அனுமதி: சிபிஎம் கண்டனம்எஸ்ஐஆர்: மோடியும் அமித் ஷாவும் நாட்டை கொள்ளை அடிக்கின்றனர்! ராகுல் பேட்டி!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: அசம்பாவிதமின்றி அமைதியான முறையில் வாக்குப் பதிவு நிறைவுதிருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம்: சிறப்பு தரிசனத்துக்கான முன்பதிவு நாளை தொடக்கம்இடைத்தேர்தல்: மதுராந்தகம், தாராபுரம் உள்பட 6 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவு!பைக் பந்தயம்: சென்னையில் 3 நாள்களில் 2,000 வாகனங்கள் பறிமுதல்!

இந்திய அணியின் கேப்டனாக ஸ்மிருதி மந்தனா நியமனம்; ஜிம்பாப்வேவுக்கு எதிராக முதல் தொடர்!

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக ஸ்மிருதி மந்தனா நியமிக்கப்பட்டுள்ளார்.

smiriti mandhana

ஸ்மிருதி மந்தனா - கோப்புப் படம்

Published On :

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக ஸ்மிருதி மந்தனா நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ஹர்மன்பிரீத் கௌர் அவரது கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவதாக இன்று (அக்டோபர் 6) அறிவித்தார். அனைத்து வடிவிலான போட்டிகளுக்குமான கேப்டன் பொறுப்பிலிருந்தும் விலகிய அவர், இந்திய அணியில் கேப்டனாக தனது கடமை முடிந்துவிட்டதாகவும் தெரிவித்தார்.

இந்த நிலையில், இந்திய அணியின் புதிய கேப்டனாக ஸ்மிருதி மந்தனா நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய அணியின் புதிய கேப்டனாக ஸ்மிருதி மந்தனாவை நியமித்த பிசிசிஐ, ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களுக்கான இந்திய அணியையும் அறிவித்துள்ளது.

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடர் வருகிற அக்டோபர் 16 ஆம் தேதியும், ஒருநாள் தொடர் அக்டோபர் 23 ஆம் தேதியும் தொடங்குகிறது. ஸ்மிருதி மந்தனா கேப்டனாக தனது முதல் தொடரை ஜிம்பாப்வேவுக்கு எதிராக தொடங்குகிறார்.

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி விவரம்

ஸ்மிருதி மந்தனா (கேப்டன்), ஷஃபாலி வர்மா (துணைக் கேப்டன்), நிகி பிரசாத், ஹர்மன்பிரீத் கௌர், அனுஷ்கா சர்மா, ரிச்சா கோஷ், ஜி. கமலினி, தீப்தி சர்மா, பிரேமா ரௌத், ஸ்ரீ சரணி, நந்தினி சர்மா, கிராந்தி கௌட், அருந்ததி ரெட்டி, ஜிந்திமணி கலிதா, மின்னு மணி.

ஜிம்பாப்வேவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி விவரம்

ஸ்மிருதி மந்தனா (கேப்டன்), ஷஃபாலி வர்மா, பிரதீகா ராவல், ஹர்மன்பிரீத் கௌர், ஹர்லீன் தியோல், தேஜல் ஹஜப்னிஸ், தீப்தி சர்மா, ரிச்சா கோஷ், யாஷ்திகா பாட்டியா, வைஷ்ணவி சர்மா, நந்தினி சர்மா, ஸ்ரீ சரணி, கிராந்தி கௌட், சயாலி சத்கரே, ரேணுகா தாக்குர்.

Summary

Smriti Mandhana has been appointed as the new captain of the Indian women's cricket team.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER