தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

பாகிஸ்தானுக்காக வரலாற்று சாதனை..! 38 வயதில் நோமன் அலி அசத்தல்! (விடியோ)

38 வயதாகும் நோமன் அலி பாகிஸ்தானுக்காக வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

News image
நோமன் அலி- படம் | AP
Updated On :25 ஜனவரி 2025, 7:37 am

DIN

பாகிஸ்தானுக்காக வரலாற்று சாதனை படைத்துள்ளார் 38 வயதாகும் சுழல்பந்து வீச்சாளர் நோமன் அலி.

முதல்முறையாக டெஸ்ட்டில் ஹாட்ரிக் விக்கெட்டுகள் எடுத்த முதல் பாகிஸ்தான் சுழல்பந்து வீச்சாளர் என்ற சாதனையை இன்றைய மேற்கிந்தியத் தீவுகள் அணியுடனான போட்டியில் சாதித்துள்ளார்.

2ஆவது டெஸ்ட்டில் 41 ஓவர் முடிவில் மே.இ.தீ. அணி 162 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்துள்ளது. நோமன் அலி 5 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.

2ஆவது டெஸ்ட்டின் முதல் நாளில் 12ஆவது ஓவரில் ஜஸ்டின் கிரீவ்ஸ், டெவ்ன் இமாச், கெவின் சின்க்ளைர் ஆகியோரது விக்கெட்டுகளை வரிசையாக எடுத்து அசத்தினார்.

2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் முதல் டெஸ்ட்டில் பாகிஸ்தான் அணி வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

41.1 ஓவரில் மே.இ.தீ. அணி 163 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. நோமன் அலி 6 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.