அஸ்மதுல்லா ஓமர்சாய் (கோப்புப் படம்)
அஸ்மதுல்லா ஓமர்சாய் (கோப்புப் படம்)படம் | ஐசிசி

2024-ஆம் ஆண்டுக்கான சிறந்த வீரருக்கான விருதை வென்ற ஆப்கானிஸ்தான் வீரர்!

ஐசிசியின் கடந்த ஆண்டுக்கான சிறந்த வீரருக்கான விருதினை ஆப்கானிஸ்தான் அணியின் ஆல்ரவுண்டர் வென்றுள்ளார்.
Published on

ஐசிசியின் கடந்த ஆண்டுக்கான ஒருநாள் போட்டிகளில் சிறந்த வீரருக்கான விருதினை ஆப்கானிஸ்தான் அணியின் ஆல்ரவுண்டர் அஸ்மதுல்லா ஓமர்சாய் வென்றுள்ளார்.

ஆப்கானிஸ்தன் அணியின் ஆல்ரவுண்டரான அஸ்மதுல்லா ஓமர்சாய், கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருகிறார். கடந்த ஆண்டு ஒருநாள் போட்டிகளில் ஆப்கானிஸ்தான் அணிக்காக ஓமர்சாய், பந்துவீச்சு மற்றும் பேட்டிங் என இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டார்.

டி20 போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட போதிலும், ஒருநாள் போட்டிகளே அவருக்கு கடந்த ஆண்டை மிகவும் மறக்க முடியாத ஆண்டாக மாற்றியது. கடந்த ஆண்டில் ஒருநாள் போட்டிகளில் ஆப்கானிஸ்தான் அணிக்காக அதிக ரன்கள் குவித்தவர்களில் ரஹ்மனுல்லா குர்பாஸுக்கு அடுத்தபடியாக ஓமர்சாய் இரண்டாவது இடத்தில் உள்ளார். அதேபோல, ஆப்கானிஸ்தான் அணிக்காக கடந்த ஆண்டில் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றிய பெருமையும் அவரையேச் சேரும்.

கடந்த ஆண்டில் ஆப்கானிஸ்தான் அணி விளையாடிய 5 ஒருநாள் தொடர்களில் 4 தொடர்களில் வெற்றி பெற்றுள்ளது. அயர்லாந்து, தென்னாப்பிரிக்கா, வங்கதேசம் மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு எதிரான ஒருநாள் தொடர்களை ஆப்கானிஸ்தான் அணி வென்று அசத்தியது. இந்த நான்கு தொடர்களிலும் அஸ்மதுல்லா ஓமர்சாய் சிறப்பாக செயல்பட்டு அணியின் வெற்றிக்கு உதவினார்.

இந்த நிலையில், ஐசிசியின் கடந்த ஆண்டுக்கான ஒருநாள் போட்டிகளுக்கான சிறந்த வீரருக்கான விருதினை அஸ்மதுல்லா ஓமர்சாய் வென்றுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

கடந்த ஆண்டில் 14 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அஸ்மதுல்லா ஓமர்சாய், 417 ரன்களையும், 17 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com