பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

சாம்பியன்ஸ் டிராபிக்கான டிக்கெட் விற்பனையை தொடங்கும் ஐசிசி!

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடருக்கான டிக்கெட் விற்பனையை ஐசிசி தொடங்கவுள்ளது.

படம் | ஐசிசி

Published On :

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடருக்கான டிக்கெட் விற்பனையை ஐசிசி நாளை (ஜனவரி 28) தொடங்கவுள்ளது.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 19 ஆம் தேதி தொடங்கி மார்ச் 9 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. போட்டிகள் பாகிஸ்தானில் நடத்தப்படுகின்றன. இந்திய அணிக்கான போட்டிகள் மட்டும் துபையில் நடத்தப்படுகின்றன.

டிக்கெட் விற்பனை தொடக்கம்

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் இன்னும் சில வாரங்களில் தொடங்கவுள்ள நிலையில், போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனையை ஐசிசி நாளை (ஜனவரி 28) முதல் தொடங்கவுள்ளது.

போட்டிக்கான சாதாரண டிக்கெட்டின் குறைந்தபட்ச விலையை ரூ. 310 ஆக ஐசிசி தோராயமாக அறிவித்துள்ளது. பிரீமியம் டிக்கெட்டுக்கான குறைந்தபட்ச விலை தோராயமாக ரூ.465 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இறுதிப்போட்டிக்கான டிக்கெட் விற்பனை, முதல் அரையிறுதிப் போட்டி நிறைவடைந்தவுடன் தொடங்கும் எனவும் ஐசிசி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை தொடர்பாக ஐசிசி தெரிவித்ததாவது: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கவுள்ளதை அறிவிப்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறோம். கடந்த 1996 ஆம் ஆண்டுக்குப் பிறகு, ஐசிசி தொடரை நடத்தவுள்ள பாகிஸ்தானுக்கு இது மிகவும் முக்கியமான தருணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளுக்கான டிக்கெட்டுகளை வாங்க ரசிகர்கள் முதலில் ஐசிசியின் அதிகாரபூர்வ இணையதளப் பக்கத்தில் பதிவு செய்திருக்க வேண்டியது அவசியம்.

சாம்பியன்ஸ் டிராபி நடைபெறும் மைதானங்களை சீரமைக்கும் பணிகளை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இன்னும் முழுமையாக முடிக்காத நிலையில், சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனையை ஐசிசி தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.