ரஞ்சி கோப்பையில் விராட் கோலி; பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிப்பு!

ரஞ்சி கோப்பை போட்டிக்கான பயிற்சியில் விராட் கோலி ஈடுபட உள்ளதால் மைதானத்துக்கான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
விராட் கோலி (கோப்புப் படம்)
விராட் கோலி (கோப்புப் படம்)
Published on
Updated on
1 min read

ரஞ்சி கோப்பை போட்டிக்கான பயிற்சியில் விராட் கோலி ஈடுபட உள்ளதால் மைதானத்துக்கான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்திய அணியின் ரன் மெஷின் என்று அழைக்கப்படும் விராட் கோலி சமீப காலமாக தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். பிசிசிஐ-ன் புதிய வழிகாட்டுதலின் படி, அவர் ரஞ்சி போட்டியில் தில்லி அணிக்காக களமிறங்கவுள்ளார்.

அவர் கடைசியாக கடந்த 2012 ஆம் ஆண்டு உத்தர பிரதேசத்துக்கு எதிரான ரஞ்சி போட்டியில் விளையாடியிருந்தார். 12 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் ரஞ்சி போட்டியில் மீண்டும் விளையாடவுள்ளார்.

பாதுகாப்பு அதிகரிப்பு

ரயில்வேஸ் அணிக்கு எதிரான போட்டியில் தில்லி அணிக்காக விராட் கோலி களமிறங்கவிருக்கிறார். இந்தப் போட்டிக்கான பயிற்சியை நாளை தில்லி அணி வீரர்களுடன் விராட் கோலி தொடங்கவுள்ளதாகக் கூறப்படுவதால், தில்லி அருண் ஜெட்லி மைதானத்துக்கான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தில்லி கிரிக்கெட் சங்க செயலர் அசோக் சர்மா கூறியதாவது: இந்திய அணியின் மூத்த வீரர்களில் ஒருவரான விராட் கோலியுடன் இணைந்து விளையாடவுள்ளது இளம் வீரர்களுக்கு மிகப் பெரிய அனுபவமாக இருக்கும். தில்லி அணியில் உள்ள வீரர்களில் நவ்தீப் சைனியை தவிர்த்து, மற்ற வீரர்கள் யாரும் விராட் கோலியுடன் இணைந்து விளையாடியது கிடையாது. தில்லி அணி வீரர்கள் விராட் கோலியைப் பார்த்து நிறைய கற்றுக் கொள்வார்கள்.

ரயில்வேஸ் அணிக்கு எதிரான போட்டியில் தில்லி அணிக்காக விராட் கோலி விளையாடவுள்ளதால், இந்த போட்டிக்கான மதிப்பு மேலும் அதிகரித்துள்ளது. சாதாரணமாக ரஞ்சி போட்டிக்கு 10 அல்லது 12 பாதுகாப்பு அதிகாரிகள் மட்டுமே பணியில் ஈடுபடுவர். ஆனால், விராட் கோலி பயிற்சி மேற்கொள்ள இருப்பதால், பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்படும். அதன் மூலம், விராட் கோலி எந்த ஒரு தொந்தரவுமின்றி பயிற்சி மேற்கொள்ளலாம்.

பொதுவாக ரஞ்சி போட்டிகளை ரசிகர்கள் இலவசமாக நேரில் பார்க்கலாம். அவர்களுக்காக ஒரு கேலரி திறந்துவிடப்படும். ஆனால், விராட் கோலி விளையாடுவதால் இந்த போட்டிக்கு 3 கேலரிகள் திறந்துவிடப்படவுள்ளன. மேலும், ரசிகர்களுக்கான குடிநீர், கழிப்பறை வசதிகளும் ஏற்படுத்தி தரப்பட உள்ளன என்றார்.

தில்லி மற்றும் ரயில்வேஸ் அணிகளுக்கு இடையிலான ரஞ்சி போட்டி ஜனவரி 30 ஆம் தேதி தொடங்குவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com