12 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் ரஞ்சி டிராபியில் விராட் கோலி; தில்லி அணி அறிவிப்பு!
2024 - 2025 ஆம் ஆண்டுக்கான ரஞ்சி டிராபிக்கான தில்லி அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
ரஞ்சி டிராபியின் தில்லி அணியின் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியும் இடம்பிடித்துள்ளார். ரயில்வேஸ் அணிக்கு எதிராக வருகிற ஜனவரி 30 ஆம் தேதி தொடங்கும் போட்டிக்கான 20 பேர் கொண்ட தில்லி அணியின் வீரர்கள் பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதிய பார்டர் - கவாஸ்கர் தொடரில் இந்திய வீரர்கள் யாரும் சரியாக சோபிக்காததால் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகினர். இதனால், வீரர்கள் அனைவரும் உள்ளூர் போட்டிகளிலும் விளையாடவேண்டும் என்று முன்னாள் வீரர்களும் பயிற்சியாளர்களும் கோரிக்கை வைத்தனர்.
அதன் விளைவாக முன்னணி வீரர்கள் ரோஹித் சர்மா, ரிஷப் பந்த், ஜெய்ஸ்வால், சுப்மன் கில், ஜடேஜா உள்ளிட்டோரும் ரஞ்சி அணிகளில் விளையாடினார். ஆனால், அங்கேயும் யாரும் சரியாக விளையாடவில்லை.
இதையும் படிக்க |சதம் விளாசி வரலாறு படைத்த கொங்கடி த்ரிஷா; இந்தியா அபார வெற்றி!
அதேவேளையில் சுப்மன் கில் மட்டும் ஒரு இன்னிங்ஸில் சதம் விளாச ரவிந்திர ஜடேஜா இரு இன்னிங்ஸ்களில் 12 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். சௌராஸ்டிர அணிக்கு எதிரான போட்டியில் விளையாடிய ரிஷப் பந்த் ரயில்வேஸ் அணிக்கு எதிரான ஸ்குவாடில் இடம்பெறவில்லை. மேலும், அவர் அந்தப் போட்டியில் முதல் மற்றும் 2-வது இன்னிங்ஸ் முறையே 1 மற்றும் 17 ரன்கள் எடுத்தார்.
இந்த நிலையில், விராட் கோலியும் ரஞ்சி டிராபியில் விளையாடுவதற்கு தில்லி கிரிக்கெட் சங்கத் தலைவர் ரோஹன் ஜெட்லியிடம் விருப்பம் தெரிவித்திருந்தார்.
விராட் கோலி கடைசியாக 2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் காஸியாபாத்தில் நடந்த உத்தரப் பிரதேசத்துக்கு எதிரான போட்டியில் விளையாடியிருந்தார். அதன்பின்னர் அவர் விளையாடவில்லை.
விராட்கோலி விளையாடவிருப்பதால் நார்த் எண்ட் மற்றும் ஓல்ட் கிளப் ஹவுஸ் ஸ்டாண்ட் பகுதிகள் பார்வையாளர்களுக்காக திறந்துவிடப்பட்டுள்ளன.
இந்த ரஞ்சி டிராபி போட்டிகள் முடிந்ததும், இங்கிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விராட் கோலி விளையாடவிருக்கிறார். இவ்விரு அணிகளும் மோதும் முதல் போட்டி பிப்ரவரி 6 ஆம் தேதி நாக்பூரில் தொடங்குகிறது.
தில்லி அணி விவரம்
ஆயுஷ் பதோனி(கேப்டன்), விராட் கோலி, சனத் சங்வான், அர்பித் ரானா, யஷ் துள், ஜாண்டி சிந்து, ஹிமந்த் சிங், நவதீப் சைனி, மணி க்ரேவல், ஹர்ஷ் தியாகி, சித்தாந்த் சர்மா, சிவம் சர்மா, பிரணவ் ராஜ்வன்ஸி, வைபவ் கண்ட்பால், மயங்க் குஷைன், ககன் வட்ஸ், சுமித் மாத்துர், ராகுல் கெலாட்ம், ஜிதேஷ் சிங், வன்ஸ் பேடி.
இதையும் படிக்க |ரஞ்சி கோப்பையில் விராட் கோலி; பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிப்பு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.