ஒரே நாளில்.. 287-வது சர்வதேச போட்டியில் விளையாடிய ஸ்டார்க் -அலீசா ஹீலி தம்பதி!

ஒரே நாளில்.. 287-வது சர்வதேச போட்டியில் விளையாடிய ஸ்டார்க் -அலீசா ஹீலி தம்பதி.
மிட்செல் ஸ்டார்க் -அலீசா ஹீலி
மிட்செல் ஸ்டார்க் -அலீசா ஹீலி
Published on
Updated on
1 min read

ஆஸ்திரேலியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் மற்றும் அவரது மனைவி அலீசா ஹீலி இருவரும் வித்தியாசமான சாதனைக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளனர்.

ஆஸ்திரேலியா - இலங்கை அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி கிரிக்கெட் அணி காலேயில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 654/6 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. உஸ்மான் கவாஜா இரட்டை சதம் அடிக்க ஸ்மித், இங்லிஷ் இருவரும் சதம் விளாசினார்.

அடுத்து தனது இன்னிங்ஸை ஆடிய இலங்கை அணி 2-வது நாள் முடிவில், 3 விக்கெட் இழப்புக்கு 44 ரன்கள் எடுத்துள்ளது. மிட்செல் ஸ்டார்க் ஒரு விக்கெட் வீழ்த்திய போது சர்வதேச கிரிக்கெட் 700-வது விக்கெட்டாக அமைந்தது.

இதையும் படிக்க | அறிமுக டெஸ்ட் போட்டியில் அதிவேக சதம் விளாசிய டாப் 3 வீரர்கள்!

அதேவேளையில், ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி மெல்பர்னில் இன்று (ஜன.30) தொடங்கியது. இங்கிலாந்து அணி அதன் முதல் இன்னிங்ஸில் 170 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் சிறப்பாக விளையாடிய நாட் ஷிவர் பிரண்ட் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இந்த நிலையில், ஆஸ்திரேலிய மகளிர் அணியின் கேப்டனான அலீசா ஹீலிக்கும், மிட்செல் ஸ்டார்க்கும் இது 287 ஆவது சர்வதேசப் போட்டியாக அமைந்தது. நட்சத்திர கிரிக்கெட் தம்பதிகள் இருவரும் ஒரே நாளில் 287 வது போட்டியில் விளையாடியதற்கு ரசிகர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

மிட்செல் ஸ்டார்க் -அலீசா ஹீலி இருவரும் கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். அலீசா ஹீலி 10 டெஸ்ட், 115 ஒருநாள், 162 டி20 போட்டிகளிலும், மிட்செல் ஸ்டார்க் 95 டெஸ்ட், 127 ஒருநாள், 65 டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளனர்.

இதையும் படிக்க |லாகூரில் பிப்.16-ல் சாம்பியன்ஸ் டிராபி தொடக்க விழா!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com