தேநீர் இடைவேளை: 600 ரன்களை எட்டிய ஆஸி.!

காலே டெஸ்ட்டில் இரண்டாம் நாள் தேநீர் இடைவேளை வரை 600 ரன்களை எட்டியுள்ளது ஆஸி. அணி.
வலுவான நிலையில் ஆஸி.
வலுவான நிலையில் ஆஸி. படம்: ஏபி
Published on
Updated on
1 min read

காலே டெஸ்ட்டில் இரண்டாம் நாள் தேநீர் இடைவேளை வரை 600 ரன்களை எட்டியுள்ளது ஆஸி. அணி.

நேற்று (ஜன.29) தொடங்கிய முதல் டெஸ்ட்டில் முதல்நாள் முடிவில் ஆஸி. அணி முதல்நாள் முடிவில் 81.1 ஓவரில் 330/2 ரன்கள் எடுத்திருந்தது.

இரண்டாம் நாளான இன்று அதிரடியாக துவங்கிய ஆஸி. அணியில் கவாஜா தனது முதல் இரட்டை சதத்தை அடித்து அசத்தினார்.

ஸ்மித் 141 ரன்களுக்கு ஆட்டமிழக்க கவாஜாவும் 232 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

இருப்பினும் அறிமுகப் போட்டியிலேயே சதமடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார் ஜோஷ் இங்கிலிஷ். 90 பந்துகளில் அதிரடியாக விளையாடி சதமடித்தார்.

தற்போது, தேநீர் இடைவேளை வரை 143 ஓவர்கள் முடிவில் ஆஸி. அணி 600/5 ரன்கள் எடுத்துள்ளது.

களத்தில் அலெக்ஸ் கேரி 25, பியூ வெப்ஸ்டர் 10 ரன்களுடன் விளையாடி வருகிறார்கள்.

இலங்கை சார்பில் பிரபாத் ஜெயசூர்யா 3, ஜெஃப்ரி வாண்டர்சே 2 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார்கள்.

முதல் இன்னிங்ஸ் - ஆஸி. ஸ்கோர் கார்டு

உஸ்மான் கவாஜா - 232

டிராவிஸ் ஹெட் - 57

மார்னஸ் லபுஷேன் - 20

ஸ்டீவ் ஸ்மித் - 141

ஜோஷ் இங்கிலிஷ் -102

அலெக்ஸ் கேரி - 25*

பியூ வெப்ஸ்டர் -10*

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com