
இங்கிலாந்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி உணவு இடைவேளை வரை 98 ரன்களுக்கு 2 விக்கெட்டை இழந்துள்ளது.
இந்தியாவுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
எட்ஜ்பாஸ்டனில் நடைபெறும் இந்தப் போட்டியில் இந்திய அணியில் பும்ரா இல்லை என்பது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதிரடியாக தொடங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் 69 பந்துகளில் 62 ரன்கள் எடுத்துள்ளார்.
மற்றுமொரு தொடக்க வீரர் கே.எல்.ராகுல் 2 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த கருண் நாயர் 50 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
தற்போது, உணவு இடைவேளை வரை இந்திய அணி 98 ரன்களுக்கு 2 விக்கெட்டை இழந்துள்ளது.
ஜெய்ஸ்வால் 62, ஹுப்மன் கில் 1 ரன்னுடனும் களத்தில் ஆட்டமிழக்காமல் இருக்கிறார்கள்.
இங்கிலாந்து சார்பில் பிரைடன் கார்ஸ், கிறிஸ் ஓக்ஸ் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினார்கள்.
India lost 2 wickets for 98 runs at the lunch break in the 2nd Test against England.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.