

இந்தியாவுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
எட்ஜ்பாஸ்டனில் நடைபெறும் இந்தப் போட்டியில் இந்திய அணியில் பும்ரா இல்லை என்பது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய அணி (பிளேயிங் லெவன்): யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல், கருண் நாயர், ஷுப்மன் கில், ரிஷப் பந்த், நிதிஷ் குமார் ரெட்டி, ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், ஆகாஷ் தீப், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா.
முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.
இந்திய அணி பும்ரா இல்லாமல் எப்படி வெல்லும் என்பது குறித்து இந்திய ரசிகர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளார்கள்.
இங்கிலாந்து (பிளேயிங் லெவன்): ஜாக் கிராலி, பென் டக்கெட், ஆலி போப், ஜோ ரூட், ஹாரி புரூக், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜேமி ஸ்மித் (கீப்பர்), கிறிஸ் வோக்ஸ், பிரைடன் கார்ஸ், ஜோஷ் டோங், ஷோயப் பஷீர்.
ஆர்ச்சர் வருவாரென எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இங்கிலாந்து அணி மாற்றமில்லாமல் அப்படியே விளையாடுகிறது.
England won the toss and elected to bowl in the 2nd Test against India.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.